திங்கள், 15 அக்டோபர், 2018

போலி புகார்: இனி உங்கள் பேச்சை யார் நம்புவார்கள் சின்மயி?

மனநலம்
பாலியல் தொல்லை tamil.filmibeat.com- siva : கல்யாண் மாஸ்டர் மீதான போலி புகாரில் சிக்கிய சின்மயி- வீடியோ சென்னை: கல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய் என்று தெரிய வந்த பிறகு சின்மயியின் பேச்சு மீது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி. அவரின் துணிச்சலை பார்த்த பலர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்த விபரங்களை அவருக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அவரும் அந்த விபரங்களை ட்விட்டரில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
விபரங்கள் வைரமுத்து உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பற்றி பலர் தெரிவித்த பாலியல் புகார்களை சின்மயி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அப்படி அவர் வெளியிட்ட ஒரு புகாரை பார்த்து பாடகர் ரகு தீக்சித் மன்னிப்பு கேட்டார். அடடா, சின்மயி சொல்வதெல்லாம் உண்மை போன்று உள்ளதே என்று நெட்டிசன்கள் பலர் நம்பினார்கள்.

கல்யாண் மாஸ்டர் விவகாரத்திற்கு பிறகு சின்மயியின் ட்வீட்டை முழுதாக நம்ப நெட்டிசன்கள் தயாராக இல்லை. ஒரு வேளை இதுவும் பொய் புகாராக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார்கள். சின்மயி நல்ல நோக்கத்துடன் செய்து வரும் காரியம் தற்போது சந்தேகப்படும்படி ஆகிவிட்டது.

அவர் ட்வீட்டிய பல விஷயங்கள் உண்மையாக உள்ள நிலையில் ஒரு பொய் புகாரால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.< சுசி லீக்ஸுக்கு ஆதாரமாக வீடியோ இருந்தும் பொய் என்று சொல்லும் சின்மயி ஆதாரமே இல்லாமல் வெளியிடும் புகார்களை எப்படி நம்புவது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மீது உள்ள நம்பிக்கையில் ட்வீட் செய்யப் போய் பிரச்சனையில் சிக்கியுள்ளார் சின்மயி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக