புதன், 3 அக்டோபர், 2018

மாறன் சகோதரர்கள் .. பாஜகவின் சிலிப்பர் செல்கள்... தொடரும் சதிகள் ...

ஆலஞ்சியார் : இவர் தான் திரையுலகின் தளபதி , தளபதி தளபதி ..அடுத்த
மிகப்பெரிய கட்டத்திற்கு வரவேண்டும் ...ரஜினி சார் வந்துவிட்டார் .. கலாநிதி மாறன் ..
அவர் சொல்ல வந்தது நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்கிறார் .. மாறன் சகோதரர்கள் வியாபாரிகள் அவர்களின் சொத்தை வளத்தை பெருக்கிக் கொள்ள ,பாதுகாக்க அவர்களுக்கு அரசியல் தேவைபடுகிறது அதற்கு அப்பன் இருந்த கட்சி துணை நிற்குமென நம்புகிறார்கள் .. எப்போது எதிரியை கூட சில நேரம் நம்பிவிடலாம் ஆனால் கூட இருந்த குழிப்பறிப்போரை நம்ப முடியாது ..
..
2ஜி வழக்கு ..  தன் சகோதரனை அமைச்சர் பதவியிலிருந்து விடுவித்தவுடன் .. திரு.ஆண்டிமுத்து ராசா அந்த பதவியை ஏற்றதும் வன்மம் கொண்டு இவர்கள் ஆடிய ஆட்டம் .. தொடர்ந்து 2ஜியை தினம் தினம் செய்தியாக்கி மக்களிடத்தில் ராசாவின் பெயரை கெடுக்கவேண்டுமென்பதற்காக .. சாதாரணமான ஒருவன் ஒடுக்கபட்டவன் உயர்பதவியை அது தமக்கு தரப்பட்ட பதவியை அலங்கரிப்பதா என்று காழ்ப்புணர்ச்சியோடு இவர்கள் செய்த பிரச்சாரம் .. சன்டிவி எனும் செய்தி ஊடகத்தை பயன்படுத்தி இவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல.. அதையெல்லாம்,கலைஞர் பொறுத்தது முரசொலி மாறனுக்காகவே தவிர வேறில்லை ..
அடுத்து யார் என தினகரனில் ஸ்டாலினா அழகிரி என பட்டியலிட்டு .. அது மதுரை தினகரன் அலுவலக எரிப்பும் கொலையுமாக திமுகவிற்கு கலங்கத்தை கொண்டு சேர்த்தது
அதற்கு பிறகும் கலைஞர் மன்னித்து இவர்களை அருகில் வைத்திருந்தார் ..

இவர்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும் அது அவர்கள் உரிமை அதை நாம் கேட்க தேவையில்லை .. ஆனால் திமுக தலைவர் தளபதியை மக்கள் முதல்வராக்க வேண்டுமென எண்ணுகிற வேளையில் அதற்கான காலசூழல் கனிந்து வரும்நேரத்தில் தங்களின் சினிமா கம்பெனியை தூக்கிநிறுத்த வேண்டி நடிகர்களை புகழ்ந்து அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு வழிவகை செய்வது திமுகவிற்கு மட்டுமல்ல .. நாட்டுமக்களுக்கும் செய்கிற கெடுதி .. திமுகவின் வளர்ச்சிக்கு இவர்கள் எந்த விதமான பங்கையும் ஆற்றியதில்லை மாறாக திமுகவை வைத்து இவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள் ..வளமானார்கள் ..
..
சுப்ரமணிய அய்யரின் மகள் மல்லிகா மாறன் தன் இருமகன்களுக்கும் குடகிலிருந்து காவேரியையும் ஹிந்து குடும்பத்திலிருந்து ப்ரியாவையும் (இருவரும் பார்பனர்கள் )
கொண்டுவந்தார் அது அவரது விருப்பம் ஆனால் அவாள்களின் தலையீடு சன் குழுமத்தில் அவர்கள் தலையிட்ட பிறகு தான் கலைஞரையே தன் பங்கு 5% விழுக்காட்டை கொடுத்து வெளியே அனுப்பினார்கள் சன் டிவி வளர்ச்சியில் "கலைஞரின் மூளை" எந்தளவு பயன்பட்டதென்பதை நாமறிவோம் ..
கலைஞருக்காக நாம் சகித்து கொண்டிருந்தோம் இனி இவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைப்போம் ..
தலைவர் தளபதியாரை மதிக்காத அல்லது அவரது வெற்றிக்கு இடையூறு செய்கிற அவருக்கு இணையாக யாரையாவது முன்மொழிகிற செயலை தொடர்ந்து செய்கிற மாறன் சகோதரர்களை நாம் மதிக்க தேவையில்லை .. புறக்கணிப்போம்..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக