புதன், 3 அக்டோபர், 2018

எம்ஜியார் விழாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் கலைஞர் துயிலகத்தில் அஞ்சலி!

ஆலஞ்சியார் :நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா காண வந்தவர்கள்
மன்னிக்கவும் அழைத்து வரப்பட்டவர்கள் கலைஞர் ஓய்விடத்தை /நினைவிடத்தை காண பெருந்திரளாய் வந்தார்கள் ..
இதிலிருந்தே மக்கள் தலைவர் யாரென்று தெரிந்திருக்கும்,.. எம்ஜிஆரை பிடிக்கும் அவரின் ரசிகன் ஆனால் தலைவரென்றால் அது கலைஞர்தான் என்று தங்கள் செய்கையால் உணர்த்தி இருக்கிறார்கள் .. ..
தமிழகம் கண்ட மிகச்சிறந்த தலைவர் கலைஞர்
பன்முக ஆளுமை ஒவ்வொன்றிலும் பேராளுமை
தொட்டதில் எல்லாம் சிறந்ததாய் விளங்கியவர்/ மாற்றியவர் .. தமிழகம் தொடர்ந்து அவரை புறக்கணித்தபோதும் ஒருவித மாயையில் மயங்கி சொல்லபட்ட குற்றசாட்டில் உண்மை இருக்குமோ என நினைத்து தோல்வியை தந்தபோதும் மக்களுக்காக உழைத்தவர்.. ஈழத்து போராளிகளின் பெரும்பிழையால் வரலாற்றில் கழிவுகள் அறியணை ஏற வழிவகுத்த போதும் .. மாய எண்ணை காட்டி 2ஜி என்று ஊர் பேசிய போதும் #அறம்வெல்லும் என்று சொல்ல முடிந்ததே அந்த அரசியல் நேர்மை யாரிடத்திலும் காண முடியாதது .. கடைகோடி மக்களின் வாழ்விற்காக தொடர்ந்து சிந்தித்தும் செயல்பட்டுவந்த மாமனிதர் கலைஞர்


..
கொஞ்சம் வியப்பாய்தான் இருக்கிறது .. இந்திய அரசியலில் இப்படியொரு தலைவன் இன் வருவாரா என்று கேட்க வைத்திருக்கிறது .. தினம்தினம் அவர் புகழ்பாடுகிறார்கள் ஒவ்வொரு நிகழ்விலும் புதியதாய் கலைஞரைப்பற்றி அறிய முடிகிறது அறிந்து வியக்கமுடிகிறது .. தினம் தினம் புதியதொரு செய்தியாய் கலைஞர் நம்மை ஆட்கொள்கிறார்
இத்தனை சிறந்த மனிதரா இவரென்று எதிராய் நினைத்தவன் எண்ணி தலைகுனிகிறான் தன் கண்ணீரால் அஞ்சலி செலுத்த ஒய்வகம் நோக்கி வருகிறான் ..
ஒவ்வொரு துறைசார்ந்தவர்கள் கலைஞரை புகழ்வது இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காதது
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் கலைஞரின் திட்டத்தால் பலன் அடைந்திருக்கின்றன தோல்வியின் போதும் உடல்நலிவுற்றிருந்த போதும் இந்த மனிதனால் எப்படி நகைச்சுவையாக கதைக்கமுடிந்ததென்று வியக்கிறேன் .. துன்பம் வரும் வேளையில் சிரிக்க சொன்னான் வள்ளுவன் இடுக்கண் வருங்கால் நகுக.. நம்மால் முடியுமா என்ன..
ஆம் நம்மோடு வாழ்ந்த வள்ளுவன் கலைஞர்பெருமகன்
..
கலைஞர் செய்ததெல்லாம் தொலைநோக்கோடு
காலங்கடந்தும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டமாய் இருந்தது .. இன்று இந்தியாவிற்கு காப்பீடு திட்டம் .. கலைஞரின் சிந்தனையில் உதித்தது .. இன்று வடமாநிலங்களிலும் மத்திய அரசும் செயல்படுத்த நினைக்கிற திட்டங்களை முப்பதாண்டுகளுக்கு முன்பே இவரால் செயல்படுத்த முடிந்ததென்றால் இந்த மக்களின் மீது சமூகத்தின் மீது கொண்டிருந்த பற்றும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் செய்யவேண்டுமென்ற அவரின் எண்ணமும் நமக்கு விளங்கும் ..
இந்திய அரசியல் கண்ட மாபெரும் தலைவர்
திராவிடம் தந்த பெருந்தலைவர்
இன்னும் நூற்றாண்டு பின்னிட்டாலும் கலைஞரின் புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கும்
..
வாழ்க கலைஞர் புகழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக