சனி, 27 அக்டோபர், 2018

ஹர்திக் பட்டேல் : இப்போது ஒன்று சேராவிட்டால் பிறகு தேர்தலே நடக்காது!

இப்போது ஒன்று சேராவிட்டால் பிறகு தேர்தலே நடக்காது!மின்னம்பலம்: “வருகிற மக்களவைத் தேர்தலில் அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்று சேராவிட்டால், 2019 தேர்தலுக்குப் பின் இனி தேர்தலே நடத்த முடியாத சூழ்நிலை உண்டாகிவிடும்” என்று குஜராத் மாநில சமூக ஆர்வலரும், பட்டிதார் சமூகத்துக்காக போராட்டம் நடத்தியவருமான ஹர்திக் பட்டேல் எச்சரித்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சிக்காக இன்று (அக்டோபர் 27) மும்பை வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பட்டேல்,
“2019 மக்களவைத் தேர்தல் என்பது பிரதமர் மோடிக்கும் நாட்டின் விவசாயிகளுக்கும் இடையே நடைபெறுகிறது. வரும் தேர்தலை ஒட்டி மோடிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் நானும் கலந்துகொள்வேன்.
என்னுடைய வேலை என்பது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதானே தவிர குறிப்பிட்ட கட்சியை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ அல்ல. வரப் போகிற தேர்தலை மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணியாக எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் 2019 தேர்தலுக்குப் பின் நம் நாட்டில் பொதுத் தேர்தலே நடக்காமல் போகும் சூழல் உருவாகக் கூடும்” என்று மறைமுகமாக பாஜகவை சாடியிருக்கிறார்.
மேலும், “ மகாராஷ்டிராவில் மராத்தா, தாங்கர் இன மக்களின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வில்லை என்றால், வரும் தேர்தல் பாஜகவுக்கு நல்ல முடிவைக் கொடுக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக