வியாழன், 18 அக்டோபர், 2018

சபரிமலை குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை

வெப்துனியா :சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதனையடுத்து இன்று சபரிமலை நடை திறக்கப்பட்டது. இன்று ஐயப்பனை வழிபட வந்த பெண்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்ததால் சபரிமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சபரிமலை பிரச்சினையால் குருசாமி இராமகிருஷ்ணன் என்பவர் ரயில்முன் நின்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலையால் சபரிமலை ஐயப்பனின் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியபோது, 'கம்யூனிஸ்ட் ஆட்சி தொடருமானால் இப்படி நரபலிகள் தொடரும். சபரிமலை பிரச்சினையால் குருசாமி இராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்' என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக