ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சபரிமலை .. கூட்டாக பெண்களை தீயிட்டு கொளித்திய மதவெறி கூட்டம் ..சிவசேனா பாஜக இந்துத்வா கும்பல்


Savithri Kannan : பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நம்பிக்கையை குலைப்பதா..?என்று ஐய்யப்ப பக்தர்களில் சிலர் கொந்தளித்துள்ளனர்.
ஒரே ஒரு பெண் சபரி மலையில் நுழைந்தாலும் சரி பாதியாக வெட்டிவிடுவேன்.- நடிகர் துளசி.
சபரிமலையில் ஒரு பெண் நுழைவதை கண்டாலும் எங்கள் கட்சிப் பெண்கள் கூட்டாக தற்கொலை செய்து கொள்வார்கள் .- கேரள சிவ சேனா.
இவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான்;
இறைபக்தியின் ஆகப் பெரிய பலன் அல்லது இலக்கணம் என்பதே ஒருவனை இளகிய மனம் படைத்தவனாக மாற்றுவது தான்! கடவுளை காப்பாற்ற கத்தி எடுக்கப் போவதாகச் சொன்ன அந்த வீரர் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து இப்போது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள மன்னிப்பு கேட்டு மன்றாடுகிறார்!!
பெண்களை கூட்டாகத் தற்கொலைக்கு தூண்டுவதும்,பெண்களுக்கு எதிரான ஒரு வன்மச் செயலை பெண்களைக் கொண்டே அரங்கேற்றுவதும் இழிவினும் இழிவல்லவா?
சபரிமலைக்கு பெண்கள் வரக் கூடாது என்று சொல்பவர்கள் அதை சொல்ல பெண்களையே கேடயமாக்கி போராடி வருவது கடைந்தெடுத்த கோழைத்தனம்!

இப்படியெல்லாம் சொல்வதால் சாவித்திரி கண்ணன் ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் தி க ஆதரவாளர் என்று முத்திரை குத்தி ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளச் சிலர் வந்துவிடுகின்றனர். சந்தோஷம்,மகிழ்ச்சி !
ஆனால்,எனக்கு ஆழ்ந்த இறை நம்பிக்கை உண்டு.
என்னை எந்த இயக்கத்தார் ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள் என்பதை கருதி ஒரு கருத்தை நான் சொல்வதுமில்லை, சொல்லாமல் மறைப்பதும் இல்லை.
கணவன் இறந்த சிதையில் மனைவி சாக வேண்டும் என்பதை தடுக்க சட்டம் போட்ட போதும் பெண்களை கொண்டு தான் எதிர்த்தீர்கள்! இவர்கள் எந்த அளவுக்கு பெண்களை ’பிரைன்வாஷ்’ செய்துள்ளார்கள் என்பதற்கு ஒரு உதாரணம்,இந்த சம்பவம்;
அப்போது ஒரு ஆங்கில அதிகாரி எழுதியுள்ள குறிப்பில்,’’ நான் அந்த பெண் முன்பு மண்டியிட்டு,’’உங்களை என் தாயாக கருதி வணங்கி வேண்டுகிறேன். நீங்கள் நெருப்பில் விழுந்து சாகாதீர்கள் ‘’ என்ற போது, அந்த பெண் தன் சுட்டு விரலை கணவன் எரியும் சிதையில் காட்டி,அது கருகி சாம்பலாகும் வரை புன்சிரிப்புடன் இருந்த பிறகு என்னிடம்,’’இப்போதாவது நான் சொர்க்கம் செல்ல அனுமதியுங்கள் ‘’ என்று கூறி சிதையில் வீழ்ந்தாள்! என்று பதிவு செய்துள்ளார்.
நம் கடந்த கால சரித்திரத்தை பார்த்தால்,பொதுவாக அனைத்து மதவாதிகளும் பெண்களை கண்டு தான் மிகவும் அஞ்சி,கொடுரூரமாக நடந்துள்ளனர்.
கிறிஸ்த்துவ மதத்தில் மிகப்பெரிய மதத் தலைவர்களாய் பெண்கள் வர அனுமதிக்கப்படுவதில்லை.பெண்கள் பாதிரியாவதற்கு ஆசைபடுவதே பாவச் செயலாக்ப் பார்க்கபட்டு,அவர்களை சாத்தான் ஆட்கொண்டுவிட்டது என்று குற்றம் சாட்டிக் கொல்லப்பட்ட சம்பவங்கள் அனேகம்!
காரணம் பெண்கள் ஆன்மீகத்தில் மிகச் சுலபமாக உயர்ந்த நிலைக்கு செல்லமுடியும் என்ற யதார்த்தம் தான்! இயேசுனாதரின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் கூட பெண்ணில்லை.
ஜைன மதத்தின் தீர்த்தங்கரர்களில் ஒரே ஒரு பெண் மட்டும் மிக சாதுரியமாக போராடி தன்னையும் ஒரு தீத்தங்கராக்கிக் கொண்டபோதிலும், பிற்காலத்தில் அந்த பெண்ணையும் ஜைனர்கள் ஆணாக மாற்றி அடையாளப்படுத்திவிட்டனர்.
அனைத்தையும் துறந்த புத்தரே கூட தன் சீடர் படையில் சீரிளம் பெண்களுக்கு இடமில்லாமல் தான் நடந்து கொண்டார்.
கன்பியூசியஸ் மதத்தில் மனைவி என்பவள் கணவனின் உடைமை! அதனால், அவளை கொல்வதற்கு கூட கணவனுக்கு அதிகாரமுண்டு என்று இடம் பெற்றுள்ளது.
இஸ்லாமிய மதத்தைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்கு பெண்கள் விஷயத்தில் படு மோசமான பிற்போக்குத் தனங்கள் கொண்ட மதம்!அதுவும், இன்று அனேக மாற்றங்கள் கண்டு வருகிறது.
1950 களில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது,அதை மிக கடுமையாக எதிர்த்த,பெரிய சங்கராச்சாரி,’’பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தால்..,அவர்கள் கற்பு கெட்டு கணவனை விட்டு ஒடிப் போய்விடுவார்கள் என்றார்.அன்றும் இதே போல பெரும் பெண்படையைத் திரட்டித் தான் அச் சட்டம் எதிர்க்கப்பட்டது.
இந்திராகாந்தி என்ற மிகப்பெரிய பெண் ஆளுமை- அதுவும் நாட்டின் சர்வவல்லமைமிக்க பிரதமர்- தன்னை பார்க்க வந்த போது,’’அவளை பார்க்கமாட்டேன் தீட்டாகிவிடும்.ஆகவே,கிணற்றுக்கு அந்த பக்கத்தில் அவளை வந்து நிக்கச் சொல்லு .பேசறேன் ‘’ என்றவர் தான் சங்கராச்சாரியார்.!
அதையும் ஏற்று அவரைப் பார்த்து வணங்கிச் செல்லுமளவுக்கு இந்திராகாந்தியின் அறிவும் மதத்தால் பிரைன்வாஷ் செய்யப்பட்டு இருந்தது என்பது தான் கடந்த கால வரலாறு!
அதனால் தான் சொல்கிறேன். இப்போது சபரிமலைக்குப் பெண்கள் செல்வதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடும் பெண்கள்,எதிர் வரும் காலத்தில் சபரிமலைக்கு சாவகாசமாகச் செல்லக்கூடிய நிலை பத்தாண்டுகளில் வந்தே தீரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக