ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ஜெயகுமார் புகழ் சிந்து : என்னென்ன ஆதாரங்கள் வேண்டும்... கொடுக்கவா?!'' எக்ஸ்க்ளூசிவ் பேட்டி*

சிந்து``ஃபீஸ் கேட்டால் கொலைமிரட்டல்!சிந்துவின் தாயார் பயந்ததுபோலவே, அவர்மீது புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாந்தி தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக கணேசன் என்பவர் புகார் கொடுத்திருக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிசெய்து வரும் கணேசனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``சிந்துவின் தாயாரை எனக்கு 2014-ம் ஆண்டிலிருந்தே தெரியும். இரண்டு வழக்கு
விகடன் : என்னென்ன ஆதாரங்கள் வேண்டும்... கொடுக்கவா?!'' `ஜெயக்குமார் புகழ்' சிந்து எக்ஸ்க்ளூசிவ் பேட்டி*
அமைச்சர் ஜெயக்குமாருடன் சிந்து என்ற பெண்ணைத் தொடர்புப்படுத்தி வெளியான ஆடியோ பரபரப்பைப் பற்ற வைத்தன. ``ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல. மார்பிங் செய்யப்பட்டிருக்கிறது'' என ஜெயக்குமார் விளக்கமளித்தார். அடுத்த அதிரடியாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கொளுத்திப்போட்ட தீ எரிய ஆரம்பித்தது.
அவர் அளித்த பேட்டியில், ``ஜெயக்குமார் தொடர்பான வீடியோ, ஆடியோக்கள் இருக்கின்றன. திண்டுக்கல்லில் தங்கியதற்கான ஹோட்டல் பில் உள்ளது. சிந்துவின் குழந்தைக்கு ஜெயக்குமார்தான் அப்பா. அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து, குழந்தைக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

இப்படியான சூழலில், திடீர் திருப்பமாக சிந்துவின் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய ஆரம்பித்தன. வழக்கறிஞர் ஒருவர் சிந்துவின் மீது புகார் அளித்தார். அடுத்த புகார் சூப் கடைக்காரர் மூலம் வந்தது. வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், ``ஆசை வார்த்தைகள் சொல்லி 3.50 லட்சம் ரூபாயை சிந்து ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்" என போலீஸில் புகார் அளித்திருக்கிறார். ``மண்ணடியில் நான் வைத்திருந்த சூப் கடைக்கு சிந்து வந்து போனதால் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. என்னைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னார். அம்மாவுக்கு இதயப் பிரச்னை இருக்கிறது. அவருக்கு ஆபரேஷன் செய்ய 5 லட்சம் தேவைப்படுகிறது என்றார். திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 3.50 லட்சம் ரூபாயை அவருக்கு அளித்தேன். பணத்தைக் கேட்டபோது `உன் மீது பாலியல் புகார் கொடுப்போம்' என மிரட்டினார்கள். ஆட்களை வைத்து என்னை மிரட்டிய சிந்து மற்றும் அவரது தாய் சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் சிந்துவின் கருத்தை அறிய முயன்றோம். நீண்ட முயற்சிக்குப் பிறகு சிந்துவின் தாய் சாந்தியும் சிந்துவும் பேசினார்கள். முதலில் சாந்தி பேசினார். ``ஏழுகிணறு ஏரியாவில்தான் எங்கள் வீடு இருக்கிறது. மண்ணடியில் இருக்கிற சூப் கடையில் ஒரு முறை சூப் சாப்பிட்டோம். சூப் நன்றாக இருந்ததால் தொடர்ந்து அந்தக் கடையில் வாங்கினோம். ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே சூப் கொண்டு வந்து கொடுத்தார்கள். அப்படிதான் சூப் கடையை நடத்தும் சந்தோஷ்குமார் சூப் கொண்டு வந்து கொடுப்பார். அமைச்சர் ஜெயக்குமார் விவகாரம் வெளியான பிறகு சந்தோஷ்குமார் எங்களுக்கு போன் செய்தார். அப்போது, `பெரியவரை காப்பாற்ற வேண்டும். அதற்காக எவ்வளவு தொகையையும் தர அவர் தயாராக இருக்கிறார். இதற்கு உங்கள் உதவி வேண்டும்' என்றார். `என்ன விஷயம். யார் அந்தப் பெரியவர்' எனக் கேட்டபோது ஜெயக்குமார் பெயரை சந்தோஷ்குமார் சொன்னார். `அமைச்சரிடம் இதுவரை 10 ரூபாய்கூட நாங்கள் வாங்கவில்லை. அவர் தருகிற பணம் எங்களுக்குத் தேவையில்லை' என சந்தோஷ்குமாரிடம் சொல்லிவிட்டேன்.
சிந்து
எங்களுடன் தொடர்பில் இருக்கிறவர்களை எல்லாம் ஜெயக்குமார் ஆட்கள் அணுகி வருகிறார்கள். மளிகைக் கடைக்காரர், கேன் வாட்டர் போடுகிறவர்களை எல்லாம் அழைத்துப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு உடன்படவில்லை. இந்த நிலையில்தான் சந்தோஷ்குமாருக்குப் பணம் அளித்து எங்கள் மீது பொய் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள். சந்தோஷ்குமார் எங்களிடம் பேசியதற்கான ஆதாரம் இருக்கிறது. தேவைப்பட்டால் அதை தக்க நேரத்தில் வெளியிடுவோம்'' என்றார் சாந்தி.
அடுத்து பேசிய சிந்து, ``ஜெயக்குமாருக்கு வேண்டப்பட்ட செந்தில்தான் சந்தோஷ்குமாரிடம் பேசியிருக்கிறார். அவருக்குப் பணத்தைக் கொடுத்து இப்படி அபாண்டமான புகாரை என் மீது சுமத்தியிருக்கிறார்கள். அப்படிப் பணத்தை வாங்கி ஏமாற்றும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள் அல்ல நாங்கள். எங்களுக்குச் சொந்தமான வீடு இருக்கு. பிசினஸ் செய்து வருகிறோம். சந்தோஷ்குமாரிடம் பணத்தை வாங்கும் அளவுக்கு எங்கள் நிலைமை இல்லை. அமைச்சர் தொடர்பான ஆதாரங்கள் நிறைய இருக்கு. அதுபோல ஆதாரம் இருந்தால் சந்தோஷ்குமாரை காட்டச் சொல்லுங்கள். அமைச்சரைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தால் அவர் எங்களை அசிங்கப்படுத்த நினைக்கிறார். என் விவகாரத்தை திசைத் திருப்ப இப்படிப் பொய்யான புகார்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதோடு இந்த விளையாட்டை நிறுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆதாரங்களை வெளியிடுவேன்'' என்றார் சிந்து.
*நன்றி : விகடன்* ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக