ஞாயிறு, 14 அக்டோபர், 2018

வைரமுத்து :சின்மயி வழக்கை தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் .. விடியோ


மாலைமலர் :என் மீது பாடகி சின்மயி கூறி வரும் பாலியல் குற்றச்சாட்டு உண்மை எனில்,
வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.  சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - வைரமுத்து கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர். அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார். அதன்பின்னர் வைரமுத்துவிடம்

கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை என்று
கூறியிருந்தார். மேலும் வைரமுத்து மீது புகார் அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு, என்னுடைய வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறேன். விரைவில் வழக்கு தொடர்வேன்’ என்றார். இது தொடர்பாக வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன். பாலியல் புகார் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை யாரும் இப்போது முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலைவணங்குகிறேன்’ என்றா

1 கருத்து: