திங்கள், 1 அக்டோபர், 2018

திருமுருகன் காந்தியின் உடல்நிலை பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி!

என்ன பிரச்சனை tamil.oneindia.com - shyamsundar: வேலூர்: வேலூர் சிறையில் உள்ள மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பல முக்கிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐநாவில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சிறை சென்று இன்றோடு 50 நாட்கள் ஆகிவிட்டது. அவர் உடல்நிலை இதனால் மோசமாக நலிவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மே17 இயக்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்று போட்டுள்ளது.
அதில், திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவின் காரணமாக இன்று மீண்டும் வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு, செரிமானக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக