புதன், 3 அக்டோபர், 2018

தக் பெஹ்ராம் .. 931 பேரை கொன்ற இந்தியன் சீரியல் கில்லர்.. உலகில் அதிகம் பேரை கொன்றவன்

Balaji Viswanath Boldsky : உலகின் மிகக் கொடூரமான சீரியல் கில்லர் என்றாலே
அவன் எங்கோ அமெரிக்காவின் கலிபோர்னியா அல்லது டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவனாக இருப்பான். துப்பாக்கி, கையெறி குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்திருப்பான் என நாம் நினைப்போம். நூற்றுக்கணக்கில் கொலை செய்த உலகின் டாப் 10 ரண கொடூரமான சீரியல் கில்லர்ஸ்!! ஆனால், அவன் டெல்லி - ஜபல்பூர் வழியில் வாழ்ந்தவன், வெறும் கர்சீப்பை கொண்டு 931 உயிர்களை கொன்று குவித்தவன் என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பி தான் ஆகவேண்டும். ஓர் இந்தியன் தான் உலகிலேயே மிகவும் அச்சுறுத்தலான, கொடூரமான சீரியல் கில்லராக இருந்துள்ளான்...
தக் பெஹ்ராம் Thug என்ற வார்த்தைக்கு பெரும்பாலானோருக்கு என்ன பொருள் என்று தெரியாது. Thug என்றால் குண்டர் அல்லது கொள்ளைக்காரன் என்று பொருள். இது ஆங்கிலே சொல்லே அல்ல, இந்தி சொல்லான தக் "Thag"ல் இருந்து மருவிய சொல்.
 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தக் பெஹ்ராம் என்ற கொள்ளையர்களின் தலைவனின் பெயரில் இருந்து தான் இந்த சொல் வந்தது என சிலர் கூறுகின்றனர்.


 தக் பெஹ்ராம் எனும் இவன் மனித குணம் படைத்தவேனே அல்ல, மிருக குணம் கொண்டவன். இவன் 931 உயிர்களை கொன்று குவித்த சீரியல் கில்லர்.

 தக் பெஹ்ராம் மற்றும் இவனது கூட்டம் பல கொலைகளை பணத்திற்காகவோ, பொருளுக்காகவோ இன்றி மதத்தின் பேரில் நடந்தவை எனவும் கூறப்படுகிறது.
 டெல்லி, ஜபல்பூர், குவாலியர் போன்ற பகுதிகளின் வழியாக வணிகம் செய்ய பயணிப்பவர்கள் உயிரின் மீது பயம் கொண்டு தக் பெஹ்ராம் இருக்கும் வழியை தவிர்த்து வேறு வழியில் பயணிக்க ஆரம்பித்தனர்.

ஒரு மெடல் பாதிக்கப்பட்ட மஞ்சள் கர்சீப்பை பயன்படுத்தி, கழுத்தை நெரித்துக் கொல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.
1800-களின் தொடக்கத்தில் திடீரென சுற்றுலா பயணிகள், வீரர்கள், நாடோடிகள் உட்பட பலர் மாயமாகினர். இது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. போலீஸ் குழம்பி போய் காணப்பட்டது. 1809-ல் கேப்டன் வில்லியம் ச்லீமேன் தான் இந்த மர்மத்தை கண்டுபிடிக்க வந்தார்.

பெஹ்ராம் மற்றும் அவனது 200 க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. டெல்லி - ஜபல்பூர் வழியில் நிறைய பொறிகள் வைத்து பெஹ்ராம் கூட்டத்தை பிடிக்க இவர்கள் திட்டமிட்டனர்.

 ச்லீமேன் மற்றும் அவரது படை பெஹ்ராம் மற்றும் அவனது கூட்டத்தை சேர்ந்தவர்களை பிடிக்க பெரும் முயற்சி எடுத்தனர். ஏறத்தாழ பத்து வருடங்கள் கழித்து அவர்கள் பெஹ்ராமின் கூட்டத்தை கைது செய்தனர்.

அப்போது தான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்தது. பெஹ்ராம் கூட்டத்தினர், வணிகர்களை போலவே பயணித்து அவர்களை கடத்தி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ராமோசி "Ramosi" எனும் பாஷையை பயன்படுத்தி இவர்களுக்குள் உரையாடிக் கொண்டு, அவர்களை நேரம் வரும் போது மஞ்சள் கர்சீப்பை கொண்டு கழுத்தை நெரித்து கொன்று, அருகில் இருக்கும் கிணறுகளில் புதைத்துவிட்டு சென்றுவிடுவோம் என்று பெஹ்ராம் கூட்டாளிகள் கூறினார்.

 தக் பெஹ்ரம் அவனது 74-வது வயதில் 1840-ல் தான் கைது செய்யப்பட்டான். இவன் இவனது வாழ்நாளில் 931 கொலைகளை செய்துள்ளான். இவனை தூக்கில் இட்டு கொன்றனர்.
பெஹ்ராம் செய்த கொலைகளுக்கு குறைந்தது இவனுக்கு 65 தூக்கு தண்டனையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
 தக் பெஹ்ராம் காளியை தொடர்ந்து வணங்கி வந்த பெரும் பக்தனாக இருந்துள்ளான். அப்பாவி மக்களை, மதத்தின் பெயரில் கொன்று குவித்த தக் பெஹ்ராம், இந்த செயல் காளியை மகிழ்விக்கும் எனவும் கருதி வந்துள்ளன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக