ஞாயிறு, 28 அக்டோபர், 2018

பிராமணர் அல்லாத 54 பேர் அர்ச்சகராக நியமனம்!

- மீண்டும் மீண்டும் அசரடிக்கும் கேரளா
விகடன் :பிராமணரல்லாதோர் அர்ச்சகராக முடியாது என்ற விதியைத் தளர்த்தி கேரளாவில் தற்போது, மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் சூழல் நிலவி வருகிறது. அண்மையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் சார்பில் பட்டிலினத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட பிரமாணரல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். அந்த வகையில், பிரமாணர் அல்லாதோரை அர்ச்சகராக நியமிக்க கேரளா தேர்வாணையம் சார்பில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக நடத்தபட்டது. இதில் தேர்ச்சி அடைந்த 54 பேருக்கு அர்ச்சகர் பணி கிடைத்துள்ளது. இவர்களைக் கொச்சி தேவஸ்தானம், அரச்சகர்களாக நியமித்துள்ளது. கொச்சி தேவஸ்தான வரலாற்றில் பிராமணர் அல்லாதோர், அர்ச்சகராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இவர்கள் அனைவரையும் தந்திரிகள், தந்திரி சமாஜம், தந்திரி மண்டலம் ஆகியோர் நேர்முகத் தேர்வு நடத்தி இவர்களைத் தேர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக தேவஸம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ``ஓ.எம்.ஆர் மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் தான் 54 பேரும் அர்ச்சகராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மற்றபடி இதில் எவ்வித முறைகேடு நடைபெறவில்லை. மெரிட் லிஸ்டில் 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 16பேர் பிராமணர்கள். தேர்வு செய்யப்பட்ட 54 பேரில், 34 பேர் ஈழவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் தேவராசமூகத்தையும், இருவர் விஸ்வகர்மா சமூகத்தையும், ஒருவர் இந்து நாடார் சமூகத்தையும் சேர்ந்தவர்” என்றார்.
- விகடன் செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக