வியாழன், 11 அக்டோபர், 2018

பாடகி சின்மயின் தாய் பத்மாசினி .. இசைமேதை லால்குடி ஜெயராமனின் 42 வருட உழைப்பை ஒரேயடியாக முழுங்கிய கில்லாடி

maamallan.com :இலக்கியத்தில் தி.ஜானகிராமன் போல திரை இசையில்
எஸ்.பி.பாலசுரமணியம் போல கர்நாடக சங்கீத்தத்தில் லால்குடி ஜெயராமன் அவர்கள் மாபெரும் சாதனையாளர். மடியோடு சாஸ்த்ரீய இசையை அணுகுவோர் மன்னிக்கவும். இணைய இளைஞர்களுக்கு புரியும்படியாக சொல்லவேண்டும் என்பதற்காகக் கூறிய வார்த்தைகளே இவை. சிலருக்கு இது  லால்குடியை அவமதிப்பாகக்கூட தோன்றலாம். குறிப்பாக, பணிவின் சிகரமான எஸ்.பி.பி காதுக்கு இது போகாமல் இருக்க வேண்டும். தவறிப் போய்விட்டால் என்கதி அதோகதிதான். யாரைய்யா அவன் மாமல்லன் என்று விசாரித்து, என் கல்லூரித்தோழன்தான் இயக்குநர் வசந்த் என்பதைக் கண்டுபிடித்து, அவனிடம் என் அலைபேசி எண்ணை வாங்கி, லால்குடி எங்கே நான் எங்கே அவரோடு போய் என்னை எப்படி ஒப்பிடப் போயிற்று என்று எஸ்.பி.பி என்னிடம் சண்டைக்கே வந்தாலும் வியப்பில்லை. ஏனென்றால் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் எதிரில் காஞ்சிப் பெரியவர் தன்னைப் பாடச்சொல்லிக் கேட்டதைத் தம் வாழ்நாள் பாக்கியம் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லி மகிழ்பவர் எஸ்.பி.பி.


 1992ஆம் ஆண்டு ஸ்ரீராம் குழும நிறுவனர்களில் ஒருவரான ஆர். தியாகராஜன் லால்குடி ஜெயராமன் அவர்களின் ஆளுமையைப் பதிவுசெய்ய வேண்டும் என்று விரும்பினார். அதன் பொருட்டு லால்குடி அவர்களிடம் இசை கற்க ஆர்வமுளோர் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் கொடுத்தார். ஆனந்த விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டம் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர் திட்டத்தின் மூலம் விகடனுக்குள் பத்திரிகையாளராய் நுழைந்ததால் எப்படி இன்று செல்வாக்குள்ள எழுத்தாளராக எஸ்.ராமகிருஷ்ணன் இருக்கிறாரோ அது போல, லால்குடி அவர்களால் தேர்வு செய்யப்பட்டு அந்த நிகழ்வில் பங்குபெற்றுப் பயின்ற 12 மாணவர்களில் சாக்கேத் ராமன், விசாகா ஹரி போன்றோர் இன்று நட்சத்திரங்கள்

இலக்கியத்தில் ஈர்ப்புள்ளவர்களில் சித்தர் பாடல்களால் கவரப்படாதவர்களே இருக்கமுடியாது. சோ ராமசாமி அவர்களிடம், காமராஜ் காங்கிரஸ் கூட்டங்களுக்காக பிரச்சாரத்துக்கு சென்ற காலங்களில் ஒரே அறையில் இருவரும் தங்க நேர்ந்த சமயத்தில், நெகிழ்ந்த தருணமொன்றில் தம் நினைவிலிருந்து கண்ணதாசன் அனிச்சையகப் பொழிந்த சித்தர் பாடல்களை சோ அவர்கள் இரண்டு மூன்று ஆடியோ கேசட்டுகளில் பதிவு செய்து பத்திரமாக பாதுகாத்து வருகிறார். சட்டப்படி அது அவருடைய தனிச் சொத்துதான். ஆனால் அதில் எனக்கும் என்போன்ற கண்ணதாசனின் லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் மானசீகமாகன பாத்தியதை உள்ளது.

கண்ணதாசனின் தேர்வு அவற்றில் உள்ளது. என் பள்ளிக்காலத்துப் பாண்டிச்சேரி கம்பன் விழாக்களில் கேட்ட அவரது மயக்கும் ஆற்றொழுக்குக் குரலில் சொல்லிய சிததர் பாடல்கள் எனது சொத்தும் கூட. அவற்றின் தற்காலிக அறங்காவலர்தாம்  சோ அவர்கள். திடீரென ஒருநாள் அந்த கேசெட்ட்ல்லாம் எங்க போச்சினே தெரியலை என்று அவர் கூறினால், குறைந்தபட்சம் எனக்குப் பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அப்படி ஏதாவது அசம்பாவிதம் நிகழும் முன் சோ அவர்கள் அவற்றை தமிழர்களுக்கு வழங்கி, தமது பல சமூக விரோத கருத்துகளுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. எல்லோருக்குமே தம் காலத்துக்குப் பிறகு சொல்லிக்கொள்ள ஏதேனும் இருக்க வேண்டாமா. அப்படியொன்றாக சோ ராமசாமி பாதுகாத்த கண்ணதாசனின் சித்தர் பாடல்கள் இருந்துவிட்டுப் போகட்டும்.

லால்குடி ஜெயராமன் பற்றி மகாராஜபுரம் சந்தானம் போன்றவர்கள் பேசிய பதிவுகள் இசை உலகுக்கு எவ்வளவு முக்கியமானவை. சந்தானம் மட்டுமல்ல, அவர் போல பல கலைஞர்கள் லால்குடி பற்றிச் சொல்லி பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களிடம் திரும்ப நேர்காணல் எடுக்கலாம் என்றால் கூட இயலாது. காரணம் அவர்களில் பலர் இன்று நம்மிடையே இல்லை. லால்குடியின் 42 வகுப்புகளும் மற்றவர்கள் அவரைப் பற்றிப் பேசி  பதிவாகி இருக்கும் வீடியோ டேப்புகளும் இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய இழப்பு. அல்லது வைத்துக்கொண்டு ஒருவர் இல்லை என்று பொய் சொல்கிறார் அல்லது கொடுக்க மாட்டேன் என்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இப்படியான நிகழ்ச்சியை நடத்துவது என முடிவானதும் இதை எல்லாம் வீடியோவில் பதிவு செய்தால் என்றென்றைக்குமாகப் பாதுகாக்க முடியுமே என்கிற ஆவலில் வீடியோ எடுக்கவும் ஏற்பாடாயிற்று. இப்படி ஒரு காரியம் நடக்கப்போகிறது என்பதைக் கேள்விப்பட்டு, தாம் லால்குடி அவர்களின் பரம ரசிகை என்றும் தமக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீராம் தியாகராஜன் அவர்களை அணுகினார் நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர்.. பாவம் எட்டு வயதுப் பெண்ணும் விவாக ரத்து வழக்குமாக அவதிப்படுகிறாரே என்று அவருக்கும் உதவி செய்ததாக இருக்கட்டும் என்று இரக்கப்பட்டு ஐயோ பாவம் என்று அவருக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் வேறு யாரும் இல்லை, இணையத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழ் இளைஞர்களின் மனதைத் தம் அன்பால் வசப்படுத்திய மரியாதைக்கும் மதிப்புக்கும் உரிய சின்மயியின் தாயார் பத்மாசினி அவர்கள்தான் அந்தப் பெண்மணி.

ஏறக்குறைய நான்கு மாதங்கள் லால்குடி அவர்களின் தி.நகர் வீட்டிலேயே படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு என்றால் எட்டு கேமரா செட்டப்பில் அக்கிரா குரசோவா போல பிருமாண்ட செட்டு போட்டு எடுக்கப்படுவதா? படப்பிடிப்பு என்பது வெறும் பதிவுதான். கேசட்டு முடியப்போவதைப் கவனமாய்ப் பார்த்து, பழையதை எடுத்து புதியதைப் போட்டுத் திரும்பவும் ஓடவிட வேண்டும். இதற்கு வாடகைக்கு எடுத்த இடத்தில் கேமிராவுடன் அனுப்பி வைக்கப்படும் ஆளே போதும். இன்றைய ஹேண்டிகேம் காலமாய் இருந்தால் அதற்கென்று தனி ஆள் கூட அவசியமில்லை. லால்குடியும் மாணவர்களும் எடுக்கப்படும் வகுப்பும் பாட்டுக்கு இடையில் லால்குடி யின் பேச்சும்தான் வேறு எதைவிடவும் முக்கியம்.

திருச்சி மலைக்கோட்டைக்குக் கூட்டிக்கொண்டுபோய் அவரது ஊரான லால்குடி பற்றிப் பேசவைத்து அவற்றையும் பதிவு செய்திருந்தார் பத்மாசினி. பழைய ஆல்பங்களை எல்லாம் விரித்து வைத்து ஆதிகாலத்துப் படங்களையெல்லாம் கீரைக்கட்டைப் பிரித்து ஆய்வதைப் போல நிறைய படங்களையும் ஆவணப்படத்துக்கு அமைவாக இருக்கும் என்று கூறி எடுத்துச் சென்றார். 92 காலகட்டத்தில் விடியோ கேமராக்கள் இப்போது போல பல்கிப் பெருகியிருக்கவில்லை என்பதால் கேமராவுக்கு வாடைகை எடுக்கும் இடங்களில் கடன் அன்பை முறிக்கும் என்று கெளரவமாகக்கூட எழுதி வைக்க மாட்டார்கள். கைல காசு வாய்ல தோசை என்பதுதான் நடைமுறை. 

அந்த பிராஜெக்டு முழுமைக்கும் பத்மாசினிக்கு மாதச் சம்பளம் கொடுக்கப்பட்டது. செலவுகள் அனைத்தும் ஈடு செய்யப்பட்டன. காந்தி முகத்தைக் கண்ணில் காட்டவில்லை என்றால், கடவுள் முகமே ஆனாலும், பதிவு செய்வது ஒருபுறம் இருக்க, ”காசிருந்தால் இங்கே வாரும் – சும்மா கடன் என்றால் வந்த வழி பாரும்” என்கிற கவி குஞ்சர பாரதியின் கொள்கைப் பிடிப்புடன் இருப்பவை வாடகைக்கு வரும் கேமராக்கள். அநேகமாகக் கவிஞருக்கு வாய்த்தது அனுபவத்தின் பாற்பட்ட காரணப்பெயராகத்தான் இருக்கவேண்டும். <;"> நான்கு மாதத்தில் எட்டு வயதுக் குழந்தையாக இருந்த சின்மயிக்கு சாப்பாடு தூக்கம் எல்லாம் பெரும்பாலும் லால்குடி வீட்டிலேயேதான்  நடந்தது. பல நாட்கள் மாமிதான் அந்தக் குழந்தைக்குத் தலைவாரி பின்னி இருக்கிறார்.

 இரு குடும்பங்களுக்கும் இடையிலான இவ்வளவு அந்நியோன்னியமும் வாஞ்சையும் ஒளிப்பதிவு முடிந்தவுடன் எங்கே போயின என்று தெரியவில்லை.

சினிமாவில் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நடிக நடிகைகளிடம் இது சகஜம். நடிக்க வாய்ப்பு கிடைக்கும் வரை இருந்த கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் கொஞ்சம் முக்கியமான சீன்களில் ஹீரோவுடனோ ஹீரோயினுடனோ கமிட் ஆனதும் காணாமல் போய்விடும். என்ன இருந்தாலும் அடுத்த கால்ஷீட்டுக்குக் கண்ட்டினூட்டிக்கி நாம்ப வேணுமில்ல என்கிற மனப்பன்மை எங்கிருந்தோ ஓடிவந்து ஒட்டிக்கொண்டு ஆட்டம் காட்ட ஆரம்பித்துவிடும். என்னத்த நடிச்சாலும் எம் மொகம் எவ்ளோ தெரிஞ்சாலும் எனக்கின்னா இவுங்க ஈரோயினி சான்ஸா தூக்கிக் குடுத்துறப் போறங்க. இல்ல நம்மகிட்ட வரப்பயலுவ தெரிஞ்ச மூஞ்சி ஆச்சேன்னு டிப்ஸத்தான் கூடக் குடுக்கப்போறானா? நிர்தாட்சண்யத்துடன் அடிநாக்கில், வாழ்க்கை நிரந்தரமாக போட்டுவிட்ட சூட்டுத்தழும்பின் தடிப்பே இதற்குக் காரணம்.

இசையுலகில், இந்த மடம் விட்டால் இன்னொரு சந்தை மடம் என்று விட்டேத்தியாக எவருமே இருக்க முடியாது. உலகுக்கு ஒரு ராஜரத்தினம் பிள்ளைதானே இருக்க முடியும். சுற்றிச் சுற்றி அதே ஆட்கள். எவரை முறைத்துக்கொண்டாலும் மொத்து விழாமல் தப்புதல் கடினம். எனவேதான் பட்டு சீலை நசநசத்து எரிச்சலை உண்டாக்கினாலும் மாறாத சிரிப்பு உதடுகளில் இருந்துகொண்டு இருக்கிறது. பத்மாசினி தொழில்முறைப் பாடகி அல்ல என்பது, எவரையும் தாம் அண்டி இருக்க வேண்டிய அவசியமில்லை என்கிற சுதந்திர உணர்வை அவருக்கு அளித்திருந்து இருக்கலாம்.

 பிராஜெக்டைத் தொடங்கி இதன் பொறுப்பை பத்மாசினியிடம் ஒப்படைத்தவர்,  நம்பளவாதானே என்று இருந்துவிட்டரோ இல்லை லால்குடியின் பரம ரசிகைனு சொன்னாளே அந்தம்மா என்று நம்பி இருந்தாரோ அல்லது ஒரேடியா எல்லாம் முடிஞ்சப்பறம் ஒரே பில்லா போட்டுக்கலாம் என்று இருந்தாரோ என்னவோ தெரியவில்லை. வேலைக்கும் கூலிக்கும் எடுத்ததுக்கும் கொடுத்ததுக்கும் என்று எதற்குமே எழுத்தில் ஏதுமில்லை.   ஒரு துண்டுக் காகிதத்தில் கூட கையெழுத்து வாங்கிக்கொள்ளவில்லை. நாப்பத்திரெண்டு நாள் ஷூட்டிங் நடந்துதாமா? நாலு நிமிஷம் கூட ஷூட் பண்ணினாப்ல நேக்கு நெனவில்லையே இப்படில்லாம் ஒன்னுமே நடக்கலை எல்லாம் இவாளோட கல்பனை என்று பத்மாசினி கூறினால்,
இல்லியேம்மா அப்ப லால்குடி மாமாத்துல நான் சாதம் சாட்டனே அந்த மாமிதான நீ ஷூட்டிங் போனப்பல்லாம் என்ன நன்னா கவுனிச்சிண்டா என்று சொல்லக்கூடும் என்கிற தேசலான நம்பிக்கையூட்ட, சின்மயி இன்று எட்டு வயது சிறுமியும் இல்லை. அந்த சின்மயி காணாமற்போய் இருபது வருடம் ஆகிவிட்டது.
அம்மா செய்யும் எதுவும் மகளுக்குத் தவறிப்போய்கூட தவறு என்று தோன்றாது. தன் மகள் என்பவள் எப்படித் தவறு செய்திருக்க முடியும். அப்படியே மீறி செய்திருக்கிறாள் என்று நிரூபித்துவிட்டால் அவையெல்லாம் பெரிய தவறே இல்லை. வேண்டுமென்றே இந்தத் தமிழ்க்காரா கும்பல்தான் தாங்கள் பிராமணர்கள் என்பதால் எல்லாவற்றையும் திரித்துப் பார்க்கின்றன என்று சொல்வதோடு நில்லாது அதையே சதமென நம்பவும் தொடங்கிவிடுவார்.
லால்குடி தம்மை மோசம் செய்துவிட்டதாக பத்மாசினி நம்புகிறார். இந்த விஷயத்தில் காசு பணத்துக்கும் லால்குடிக்கும் ஸ்நானப் பிராப்தியே கிடையாது. வகுப்பெடுத்ததோடு அவர் வேலை முடிந்தது. எடுக்கப்பட்ட டேப்புகளின் உள்ளே இருப்பவை அவருடைய கலை அவருடைய போதனை அவருடைய உழைப்பு. இவை எவற்றையுமே தம் மனதில் மனசாட்சியில் படவே அனுமதி மறுக்கிறார் பத்மாசினி.<"> போன் அடித்தால் பேசுவது இன்னார் என்று தெரிந்ததும் காது கிழியக் காட்டுக்கூச்சல்.  அந்தப் பேச்சையே எடுக்காதேள் உங்களால எங்க லைஃபே போச்சு. எங்க நிம்மதியே போச்சு. திரும்பத்திரும்ப அத்தக்குடு இத்தக்குடுன்னு கேட்டுண்டு இருந்தேள்னா, லால்குடிதான் காரணம்னு நோட் எழுதி வெச்சுட்டு சூசைட் பண்ணிண்டுடுவேன் என்று மிரட்டல்.


யார் யாரை மிரட்டுவது, நாம் ஏதும் இவர் வீட்டில் இருந்து கொள்ளையடித்து விட்டோமா என்று திருதிருவென முழித்தபடி தெய்வமே என்று விதியை நொந்துகொள்ளும் நிலைக்குப் போயிருக்கிறது லால்குடியின் குடும்பம்.<;"> ஆரம்ப வருடங்களில், நேக்குக் குடுக்க வேண்டிய பணத்தை ஆர்.டி குடுக்காம மோஷம் பண்ணிட்டார். அதை வாங்கிக்குடுத்தா எல்லாத்தையும் தந்துடறேன்.
அப்புறம் கொஞ்ச நாள் கழித்து
ஏண்டிம்மா அவரக் கேட்டா குடுக்க வேண்டீதுக்கு மேலயே குடுத்துட்டராமே என்றால்,
குடுத்தத்துக்கு ரசீதைக் காட்ட ஷொல்லுங்கோ என்று கூப்பாடு.
ரசீது இல்லதான். ஆனா நீ கைநீட்டி வாங்கினது நெஜம்தானே? ஒரு பைசாவும் நோக்குக்குடுக்கலேன்னா அந்த டைம்ல உங்குடும்பத்தை எப்ட்றீம்மா ஓட்ட முடிஞ்சிதுன்னு கேட்டா,
மலேசியா போய்ட்டு வந்தப்ப எல்லாம் போயிடுத்து.
போயுடுத்தா?
அங்க ’அவொ’ கிட்ட குடுத்துட்டு வந்துட்டேன் என்கிற விட்டேத்தி பதில்.
’அவொ’ நம்பரைத்தேடிப்பிடிச்சு விசாரிச்சா ’அவொ’ லால்குடியின் அபிமானி.
பத்மாசினி எங்கிட்ட எதையும் குடுக்கலை. அதெல்லாம் எங்கிட்ட இருந்தா. கைக்காசை செலவழிச்சிண்டு நானே உங்காத்தைத் தேடிவந்து லால்குடி மாமா கால்ல எல்லா டேப்பையும் வெச்சுட்டு விழுந்து நமஸ்காரம் பண்ணி இருக்க மாட்டேனா. என்று சொல்றா ’அவொ’
என்னடிம்மா ’அவொ’இப்புடி சொல்றாளே என்றால்.
என்கிட்ட எதுவும் இல்லை.
அதெப்புட்றீம்மா எல்லாம் மாயமா போயிடும்னு கேட்டா,
நீங்கள்லாம் சேந்து என்னைப் பண்ண டார்ச்சர்ல எல்லாத்தையும் கொளுத்திட்டேன் என்று அராஜக பதில்.
போனில் ஆலாப்பு முடித்து அம்மாவுக்கு மூச்சிரைத்ததுக்காகக் கொஞ்சம் ஓய்வெடுத்தால், பின்பாட்டாய் உச்சஸ்தாயியில்  கண்டினியூ பண்ணத் தொடங்கிட்றது இந்த சிள்வண்டு.
சின்னப்பொண்ணு ஏதோ புரியாமப் ப்ஷறதுன்னு பாத்தா அம்மாக்காரி, என்னண்டை யாரும் இது பத்தி பேஷவேண்டாம்னு மூஞ்சில அடிச்சாப்புல  போனைக் கட் பண்றா.
சரின்னு திருப்பு அடிச்சா இந்த வாண்டு எடுத்து எங்கம்மா ரொம்ப டிப்ரஸ்டா இருக்கா. அவுளுக்கு மட்டும் எதாவுது ஆச்சுன்னா உங்களையெல்லாம் ஷும்மா விட மாட்டேன் என்று காட்டுக் கத்தல்.
ஏண்டடாப்பா பேசப்போணோம்னு வாழ்க்கையே வெறுத்து ஃபோனை நாம்பதான் கட் பண்ணனும் என்கிறார்கள் லால்குடியின் நலம் விரும்பிகள்.


என்னைப்போல், இந்த அக்கிரமத்தைக் கேள்விப்பட்ட யாரோ ஒருவர், யாரோ இருவரை என்னன்னு கேட்டுப் பாருங்க என்று ஆர்வக்கோளாறில் அனுப்பி வைத்திருந்தார்களாம். அதில் ஒருவர் கோடை வெயிலிலுக்குக் கழுத்துப் பட்டைக் கறையாகிறதேயென போலீஸ் கட் அடித்திருந்தாராம்.இதைப் பார்த்துவிட்டு, நானும் என் பொண்ணுமா நாதியில்லாம தனியா இருக்கோம்னு எங்களை மஃப்ட்டிப் போலீசை விட்டு மெறட்டறார் லால்குடி ஜெயராமன்னு தெருத்தெருவாய் பிட் நோட்டீஸ் வினியோகக்கவே தொடங்கிவிட்டார் பத்மாசினி.

ஸிங்கர் க்ருஷ்ஷை அவரது தாத்தா பாட்டியை எல்லாம் ர்ர்ர்ர்ர்ர்ர்வுண்டப் பண்ணி உள்ள தள்ளிடுவேன்னு மிரட்டிய பத்மாசினியின் குரல் கேட்டவர் காதில் இன்னும் ரீங்கரித்துக்கொண்டு இருப்பதால் இந்தக் கட்டுரைகளைத் தொடர்ந்து படிப்போர்க்கு பத்மாசினியின் குரல்வளம் எப்பேர்ப்பட்டது அது எப்படி வாய்ஸ்கல்ச்சர் பண்ணப்பட்டு எவ்வளவு அநாயாசமாக பல்சர் போல் சில நொடிகளிலேயே அதிஉச்சத்தை எட்டிவிடும் வன்மை வாய்ந்தது என்பதெலாம் நன்றாகத் தெரிந்திருக்கும். 

அதுபோலவே சின்மயி விவகாரத்தில் இருக்கும் அதே சாயல் இதிலும் தெரிகிறது. சின்மயி ஃபேஸ்புக்கில் தான் இட்ட பதிவுகளில் பெருமாலானவற்றை லாயர் சொன்னர் என்கிற சாக்கைக் காட்டி தடயமில்லாது அழித்துவிட்டார். சின்மயியின் ’அண்ணா’ மாயவரத்தானோ உண்மை விளம்பி மால்லன் ஐயா அவர்களின் அநாகரிகப் பேச்சு என்று போட்டிருந்த எல்லா ட்விட்டு போட்டோக்களையும் கலத்துவிட்டர்ர்ர்ர்ர்ர்ர். அதனால் பாவம் பத்மாசினி அவர்கள் கதனகுதூகலமாய் ரீட்விட் செய்த தடயம் மட்டும் கேமரா லென்ஸாய் என்னிடம் விழித்துக்கொண்டி இருக்கின்றன.
இப்போது விசாகா ஹரிக்கே தான் லால்குடியிடம் 42 வகுப்புகள் கற்றுக்கொண்டோமா என்கிற ஐயம் இருபது ஆண்டு இடைவெளி காரணமாக வந்துவிட்டிருக்கும். சாக்கேத் ராமன் வந்து ஆமாம் வகுப்புகள் நடந்தன என்பதற்கு எனக்குக் கிடைத்துள்ள ஞானமே சாட்சி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் அது சட்டப்படி எடுபடாது, ஏனென்றால் சிஷ்யன் எப்படிக் காட்டிக் கொடுப்பார் என்று சஞ்சய் பிண்டோ குறுக்கு சால் ஓட்டினால் சாட்ச்சியம் படால் என்று ஒடிந்துவிழும். 


ஓரிரு வகுப்புகளைக் கேமராவில்  பதியும்போது லென்சைக் கழற்ற மறந்தால் எப்படி எதுவும் பதிவாகாமல் இருட்டாய் ஓடுமோ அது போல அத்துனை உழைப்பும் வியர்த்தமாகிவிட்டது லால்குடிபட்ட அத்துனை கஷ்டமும். ஏதோ தேர்ந்தெடுத்த காட்சிகள் என்கிற பேரில் பத்மாசினி காட்டிய பயாஸ் கோப்பைப் பார்த்தவர்களுக்கு  நிஜமாகவே படம் என்று ஒன்று தயாரிக்கத்தான் பட்டிருக்கிறது என்கிற நினைவு, டமார காதில் வந்து மோதிய தூரத்து இடி முழக்கமாகத்தான் இருக்கிறது. 

படம் கிண்டிய பத்மாசினியோ விண்டிலர். முழு படத்தையும் ஒப்புக்குக் கூட ஒருத்தரும் கண்டிலர்.

 பணம் காசு பிரச்சனையில் இருக்கும் இழுபறிகளை இந்தப் பிராஜெடைக் கொடுத்தவருடன் வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, கலைஞனின் படைப்பைப் பிடித்து வைத்துக்கொண்டு பிளாக் மெய்ல் பண்ணக்கூடாது. அதிலும் குறிப்பாக இசையுலகே மதிக்கும் லால்குடி ஜெயராமன் கடந்த ஆறுவருடங்களாய் உடல் நலம் குன்றி இருக்கிறார்.

இணையத்து இளம் தமிழர்கள் எவரிடமும் இல்லை. ஹோல்சேலாக என்னிடம் மட்டுமே உள்ளன என்று தாரை தப்பட்டை கிழிந்து தொங்க, பத்மாசினி அடித்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் அன்பு மனிதநேயம் கருணை வாத்சல்யம் ஆகியவை எல்லாம் அவரது கொடோனில்தான் ஒட்டுமொத்தமாய்ப் பதுங்கிக்கிடக்கின்றன என்பதை நிரூபிக்க இது ஓர் அரிய வாய்ப்பு. இதை நழுவ விடாமல் யூஸ் பண்ணிகோங்கள். 62 வயதுக்குரிய பெரிய மனுஷியாக சீக்கிரம் ஆகப்பாருங்கள் என்று நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். 
உலகெங்கும் கடைபிடிக்கப்படும் அடுத்தவர் தரப்பும் கேட்கப்பட வேண்டும் அவர்தம் தரப்பைச் சொல்ல எவருக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்கிற PRINCIPLES OF NATURAL JUSTICE எனப்படும் ஆதிமுதலாய்க் கடைப்பிடிக்க வேண்டிய உயர்ந்த இயற்கை விதிகளின்படி பத்மாசினி அவர்களின் தரப்பு என்ன என்பதை அனுப்பி வைத்தால் அட்சரம் பிறழாது இதே தளத்தில் வெளியிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

 மான நட்ட வழக்கு தொடர எச்சரித்து வக்கீல் நோட்டீசு அனுப்பினால் பதில் விளக்கம் அளிக்கவும் அதை நீதி மன்றத்தில் சந்திக்கவும் என்னுடைய வழக்கறிஞனும் கல்லூரித் தோழனும் ஆர்.காந்தி அவர்களின் அரவணைப்பில் தொழில் பயின்றவனுமான எல்.சந்திரகுமார் எனக்கு பக்க துணையாக இருக்கிறான். இது வழக்காக வரும்போது வேறு முக்கியமான வழக்கில் அவன் மும்முரமாய் இருக்கும் பட்சத்தில், என்மீது தொடரப்படும் வழக்கை நான்கூடத் தேவையில்லை பார்ட்டி இன் புக்காக இந்தப் புத்தகமே கேசை நடத்திக்கொள்ளும் என்று நம்பிக்கையோடு கூறுகிறேன். 

தப்பித்தவறி என் எழுத்து, உங்கள் தவறை உணர வைத்து, அல்லது கர்நாடக இசையுலகில் மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் நமது இருண்ட நடவடிக்கை எதிர்காலத்தில் நம் மகளையும் பாதிக்கக்கூடும் என்கிற யதார்த்த கணக்குகளின் காரணமாகக்கூட, லால்குடிக்கு சட்டப்படி உரிமையுள்ள  உழைப்பை, அவரது அபூர்வ சொத்துக்களான தமிழருக்கும் கர்நாடக சங்கீத உலகுக்கும் பொக்கிஷங்களாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டியவற்றை,  லால்குடியிடமே ஒப்படைக்கும் பட்சத்தில் பத்மாசினி அவர்களே ’இந்த’ பிரச்சனையில் உங்களைக் கையெடுத்துக் கும்பிடவும் தயார் நிலையில் உள்ளேன் என இரு கரம் கூப்பித் தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

கூடவே உங்களுக்கு சேர வேண்டிய நியாயமான சம்பளம் ஏதும் பாக்கி இருந்தால் இதுபோலவே உங்கள் சார்பாக சம்பந்தப்ப்ட்டவரிடம் போராடி அதை உங்களுக்கு வாங்கித்தரவும் தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவற்றில் எந்த ’ஒரு’ விஷயமும் எந்த ‘ஒருவர்’ மட்டுமே சொன்னதன்று. ஒவ்வொன்றாய் பலர் சொன்னவை. பிராமணர்கள் சம்பந்தப்பட்டது என்பதால், ”ஷாக்கடேல கல்ல வுட்டெறிஞ்சா நம்ப மேலனா தெறிக்கும்” என்கிற பாரம்பரியப் பழமொழியின்படி எதுவும் ’வெளியில்’ வரவே இல்லை. ஆனால் கடந்த இருபது வருடங்களாக, எங்கு போனாலும் ’அவ லால்குடி மாமாக்கு இப்புடிப் பண்ணிட்டா’ ’அவ பொண்ணு அவளே தேவலைனு ஆக்கிண்டு இருக்காளாமே ஷினிமாவுலை’ என்று  முடைநாற்றம் மட்டும் தொடர்கிறது. 

பெயரைக் குறிப்பிட்டு ”இவா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டாளாமே! நெஜமா?” என்று விசாரனையைத் தொடங்கியதுமே ஐயையோ அவளா! பேச்சே வேண்டாம் என்று பார்த்தோரெல்லாம் பத்மாசினி என்றதுமே விலகி ஓடுகின்றனர். 

எனக்கோ ஆச்சரியம். இது என்னடா நம் பேரைச் சொன்னதும் வரும் எதிர்வினையும் இதுதானே. நமக்கும் மோடி கோஷ்டியான இந்த மோசடி கோஷ்டிக்கும் ஒரே பின்னணி இசையா என்று ஆச்சரியமும் வருத்தமுமாக களேபரப்படுத்திற்று. ஆனால் இதன் அடிவரை போகாமல் விடக்கூடாது என்கிற ஆர்வத்தையும் அதுவே உண்டாக்கிற்று என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

வார்த்தைகளை எண்ணிப் பேசும் ரஹ்மான் அவர்களே! சின்மயியியைக் கூப்பிட்டு, ”வாட்ஸ் த ப்ராப்ளம் வித் லால்குடி சர்” என்றோ  ”ட்ரை டு செட்டிலிட் அமிக்கபிலி” என்றோ ஒரே ஒருமுறை ஒரு சில சொற்களை உங்களது இயல்பான முறுவலுடன் சொன்னாலே போதும் இருபது வருடங்களாய் இழுத்துக்கொண்டிருக்கும் பிரச்சனை ஒரே நாளில் இணக்கமாக முடிந்துவிடும்.

 உடலநலம் குன்றிய நிலையில் இருக்கும் அந்த வயலின் மேதைக்கு, இருபதுவருடம் முன்பு கம்பீரமாக உட்கார்ந்து தாம் இசை போதித்ததைக் கண்ணாரக் கண்டு களித்து மனம் குளிரப் பண்ணுகிற பலத்தை இறைவன் உங்கள் கைகளில் கொடுத்திருக்கிறான் என்றே நம்புகிறேன். இந்த சில வார்த்தைகளை உங்களைச் சொல்ல வைப்பதற்காக எவ்வளவு நாள் உங்கள் வீட்டுமுன் தவம் கிடக்கவேண்டும் என்றாலும் நான் தயார். அதெல்லாம் அவசியமில்லை ஆடியோமீடியா செல்வா சொன்னாலே போதும் என்று நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள், 90களிலிருந்தே அவன் எனது நண்பன்தான், இப்போதே அவனை ஃபோனில் அழைத்து விஷயத்தைச் சொல்லி உங்களிடம் பேசச்சொல்லுகிறேன். மாமல்லன் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் நம்பி இறங்கலாம் என்று அவனே தன் மனதாரக் கூறுகிறானா இல்லையா என்று நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.

பல்வேறு பணிகளுக்கு இடையில் இதை அரசுத் தலைமைவரை கொண்டுவரவேண்டுமா என்கிற தயக்கத்தில்தான் முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் முறையிட்டேன். தவறாக எண்ண வேண்டாம். தாங்களே ஒரு கலைஞர் என்கிற முறையிலும் தமிழகத்தின் முதல்வர் என்கிற முறையிலும் இதில் தனிக்கவனம் செலுத்தி இந்தப் பிரச்சனைக்கு இணக்கமான தீர்வை ஏற்படுத்தி, தமிழகத்தின் இந்தக் கலை பொக்கிஷங்களைப் பாதுகாக்குமாறு, தமிழக முதல்வர் அவர்களைத் தலை தாழ்த்தி கரம் கூப்பிக் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக