வெள்ளி, 26 அக்டோபர், 2018

வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த 3 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை

தந்திடிவி :புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டி கிராமத்தை வெள்ளைச்சாமி என்பவரது மகள் ஷாலினி விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டி கிராமத்தை வெள்ளைச்சாமி என்பவரது மகள் ஷாலினி விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமி ஷாலினியை அவரது பெற்றோர்களும் உறவினர்களும் அப்பகுதியினர் தேடியுள்ளனர். இந்நிலையில் சிறுமி விசாலினி அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக