சனி, 13 அக்டோபர், 2018

தேவர் ஜாதி ஒட்டு வங்கியை குறிவைக்கும் கமலஹாசன் .. தேவர் மகன் 2 படப்பிடிப்பு விரைவில்

வெப்துனியா :கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும், வசூல் அளவில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் 'இந்தியன் 2' படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இன்று சேலத்தில் நடந்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் 'தேவர் மகன் 2' படத்தை அதிகாரபூர்வமாக கமல்ஹாசன் அறிவித்தார். 'இந்தியன் 2' படம் முடிந்த பின்னர் 'தேவர் மகன் 2' படத்தை அவர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்
ஏற்கனவே கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக முடிவுக்கு வராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 'சபாஷ் நாயுடு', 'இந்தியன் 2' ஆகிய படங்களை முடித்துவிட்டு 'தேவர் மகன் 2' படத்தை கமல்ஹாசன் வரும் 2020ஆம் ஆண்டுதான் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக