சனி, 20 அக்டோபர், 2018

1969 வரை பெண்கள் செல்ல தடை இல்லை 1995 பெண்கள் பதினெட்டாம் படி வழி மட்டுமே தடை விதிக்கப்பட்டது.

சபரிமலை தென்னிந்தியாவின் அயோத்தி: விஹெச்பி! பூனை குட்டி வெளியில் வந்தது
Kathiravan Mumbai: சபரிமலை விவகாரத்தில் அவிழும் உண்மைகள் :
சபரிமலை தென்னிந்தியாவின்  அயோத்தி: விஹெச்பி!1969 வரை பெண்கள் செல்ல எந்த தடையும் இல்லாமல் இருந்தது. 1995 பெண்கள் பதினெட்டாம் படி வழியாக செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டது. மாற்று வழியில் அனுமதிக்கப்பட்டார்கள்..
1991 வரை மாதத்தின் முதல் 5 நாட்கள் இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முறையாக உணவு அளிக்கும் "அன்னபிரசன்னம்" விழாவுக்கு அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் செய்த அபிடவிட்டில் உள்ள தகவல்கள்.

மின்னம்பலம் :“சபரிமலை தென் இந்தியாவின் அயோத்தி” என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த மாதத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு பக்தர்களின் யாத்திரைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.

முதல் நாளில் இருந்தே பெண்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் போராட்டக்காரர்கள் திரும்பி அனுப்பிவிட்டனர். போராட்டத்தின் காரணமாக பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி போராட்டக்காரர்கள் அப்பகுதிகளில் குவிந்தனர்.
பெண்கள் கோவிலுக்குள் வந்தால் நடையை மூடிவிடுமாறு பந்தள மன்னர் குடும்பம் உத்தரவிட்டதால் பரபரப்பு சூழ்நிலையும் ஏற்பட்டது. பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அதிக அளவில் காவல் துறை குவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை விவகாரம் தொடர்பாக நேற்று (அக்டோபர் 19) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், "தேர்தல் வாக்கு வங்கிக்காக நாட்டின் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயலில் ஆர்எஸ்எஸ், பிஜேபி தொடர்ந்து ஈடுபடுகிறது. மேலும் அங்கு பத்திரிக்கையாளர்களும், பெண் செய்தியாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அன்று அயோத்தி பாபர் மசூதியில் நடந்த நிகழ்வுகள் இன்று சபரிமலையில் நடக்கிறது. அதே காவி கும்பல் தான் இங்கேயும் காணப்படுகிறார்கள்" எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக ஏஎன்ஐ ஊடகத்துக்கு பேட்டியளித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், பெண்களை சபரிமலைக்கு உள்ளே நுழையவிடாமல் தடுத்து,போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் யெச்சூரியின் கூற்று குறித்துப் பேசிய அவர், "ஆம், சபரிமலை என்பது தென் இந்தியாவின் அயோத்திதான். அவற்றின் புனிதம், மத நம்பிக்கை மற்றும் அமைதி ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தி மார்க்சிஸ்டின் உண்மையான முகத்தைக் காட்டியுள்ளனர் " என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக