புதன், 3 அக்டோபர், 2018

சீமானிடம் இருந்து மீண்ட சொத்து .. மகிழ்ச்சியில் வீட்டின் உரிமையாளர் ,, 19 ஆண்டுகள் வாடகையும் தரவில்லை .

Amirthalingam K Ariyalur சீமான் பிடியில் இருந்து மீட்கபட்ட வீடு மகிழ்ச்சியில்
உரிமையாளர்..! வழக்கறிஞர் அண்ணன் Vs Gopu அவர்களுக்கு வாழ்த்துகள், . . சீமானின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சொத்து. தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தில் 19 ஆண்டுகாலமாக நுழைய முடியாமல் பரிதவித்த பெரியவரின் நிம்மதி பெருமூச்சை இன்று கண்டேன். ஆனந்த கண்ணீரோடு, அவரது இடத்தில் அங்குமிங்கும் நடந்து பார்த்து பரவசம் அடைந்தபோது என் கண்களும் கலங்கியது. இத்தனை ஆண்டுகாலமாக 4500000 ற்கு மேல் வாடகை பாக்கி, பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல்.
ஒருவழியாக இன்று என்னால் அதற்கு தீர்வு கிடைத்தது என நினைக்கும் போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன். இத்தனைக்கும் சீமான் அவர் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல.
உண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டு சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குனராக தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தை விட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார் .

வாடகை நிர்ணயம் செய்த வழக்கில் வெற்றி, வீட்டை காலி செய்ய சொன்ன வழக்கில் வெற்றி, மேல்முறையீடு வழக்கில் வெற்றி, தீர்ப்பை செயல்படுத்தும் வழக்கிலும் இன்று இறுதி வெற்றி.

இன்று இதுவரை தான் செய்த தவறை உணர்ந்து, மனம்திருந்தி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சி சீமான்.

ஒரு பக்கம் அவர் வாழ்ந்து வளர்ந்த வீட்டை, சட்டத்தின் வழியில் பிடுங்கி, உரிமையாளர் வசம் ஒப்படைக்கும்போது சீமானுக்காக சற்று கவலையுற்றாலும், சொத்தை சம்பாதித்தவரின் முகத்தில் மகிழ்ச்சியை காணும்போது நான் நேர்மையாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்துகிறேன் என மனம் நிம்மதி அடைகிறேன்.

இதன்மூலம் அதிகாரம் மிக்க தலைவர்களுக்கு நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

அப்பாவி மக்களின் சொத்துக்களை பறித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல என்பதை ஜெயலலிதாவின் வாழ்க்கையை படித்து தெரிந்துகொள்ளுங்கள் என்பதே. நன்றி
அன்புடன் :வழக்கறிஞர் V.S.கோபு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக