புதன், 24 அக்டோபர், 2018

13 வயது சிறுமியின் கழுத்தை துண்டாக்கிய கொடூர மன நோயாளி !

சேலம் ஆத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்த ஒருவனால் 13 வயது மாணவி தலை துண்டிக்கப்பட்டு கொலை. சில நாட்களுக்கு முன் அவன் தன்னுடைய குழந்தையையே கொலை செய்ய முயன்றிருக்கிறான். இதில் ஜாதி எங்கேயும் இல்லை. அவனை அவனுடைய குடும்பத்தினரே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவனுக்கு ஏற்ற இடம் சிறை அல்ல. மனநல காப்பகமே!!
நியுஸ் 7 : ஆத்தூர் அருகே தாயின் கண் எதிரே 13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி
கழுத்தை துண்டித்த இளைஞரை அவரது மனைவியே போலீசாரிடம் பிடித்து கொடுத்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தரபுரம் காட்டு கொட்டாயில் வசிக்கும் சாமுவேல் சின்னப்பொன்னு தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருந்தனர். இந்நிலையில் 8-ம் வகுப்பு படித்து வந்த மகள் ராஜலட்சுமியுடன் சின்னப்பொன்னு நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் சின்னப் பொன்னுவின் வீட்டிற்குள் நுழைந்து அவர் கண் எதிரிலேயே அவரது மகள் ராஜலட்சுமியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை தடுக்க வந்த சின்னப்பொன்னுவையையும் தாக்கியுள்ளார். பின்னர் சிறுமியின் தலையை துண்டித்து சாலையில் வீசி விட்டு தனது வீட்டிற்கு அரிவாளுடன் தினேஷ்குமார் சென்றுள்ளார், இதை பார்த்த தினேஷ்குமாரின் மனைவி, அவரை போலீசார் பிடித்து கொடுத்தார். சிறுமியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து தினேஷ்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக