ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

நடிகைக்கு பத்திரிகையாளரின் பாலியல் துன்புறுத்தல்.. விகடன் , இந்து பத்திரிக்கைகளின் பிரகாஷ் எம் சுவாமி Prakash M Swamy


ndtv.com/tamil :கடந்த சில ஆண்டுகளாக பத்தரிகையாளர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக நடிகை குற்றம் சாட்டியுள்ளார்</>மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என்று ஃபேஸ்புக் லைவ் மூலம் குற்றம் சாட்டியுள்ளார் சென்னையைச் சேர்ந்த நடிகை.
42 வயதாகும் அந்த தமிழ் நடிகை, 8 நிமிடங்களுக்கு ஃபேஸ்புக் லைவ் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசியுள்ளார். அந்த லைவ் வீடியோ வைரலாகி இருக்கிறது.
வீடியோவில் அந்த நடிகை, ‘எனது கணவர் ஹாங்காங்கில் இறந்த பின்னர், பிரகாஷ் எம்.சுவாமி என்பவர் என்னை தொடர்பு கொண்டார். எனது மகன் பாஸ்போர்ட்டில் இருக்கும் சிக்கலை சரி செய்து தருவதாக அவர் கூறினார். இதையடுத்து எனது வீட்டுக்கு வந்த அவர், என்னிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றார். இதனால் அவரை வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டேன்.

ஆனால், போன் மூலம் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார் சுவாமி. என்னைக் குறித்து அவதூறான செய்திகளை பரப்பிவிடுவதாக அவர் மிரட்டினார். என் கணவரை கொன்றது நான் தான் என்பது போல பல தவறான தகவல்களை அவர் பரப்பி வந்தார். அது குறித்து ஒரு செய்திக் கட்டுரையையும் ஒரு வார இதழில் அவர் வெளியிட வைத்தார்’ என்றவர்,
தொடர்ந்து, ‘உயர் அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் அவர் இருக்கும் படங்களை பலருக்குக் காட்டுவார். தனக்கு நிறைய பேரைத் தெரியும் என்பது போல பலரிடம் அவர் சொல்லிக் கொண்டு, அவர்களை பயன்படுத்திக் கொள்வார்.
போலீஸிடம் இது குறித்து புகார் அளித்த போது, எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. சி.எஸ்.ஆர் தான் பதிவு செய்யப்பட்டது’ என்று கூறி வீடியோவில் சி.எஸ்.ஆர் நகலை காண்பித்தார்.
இது குறித்து பெண்கள் காவல் நிலையத்திடம் கேட்டபோது, ‘போன் மற்றும் இணையதளம் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சைபர் க்ரைம் துறையிடம் புகார் அளித்துள்ளோம்’ என்றது. சைபர் க்ரைம் துறையை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி நமது போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை.

COMMENT
சுவாமி, அமெரிக்காவில் வசித்து வருகிறார். நடிகையின் குற்றச்சாட்டுகள் குறித்து அவர், ‘நடிகையின் மகன் பாஸ்போர்ட் குறித்த சிக்கலை சரி செய்து தருவதாக நான் கூறினேன். ஆனால், அவர் வீட்டுக்கு நான் சென்றதில்லை’ என்று கூறியுள்ளார்.


Shivakkumar TD : இந்த நாடு இதன் இறையாண்மை எங்கே செல்கிறது
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறை குறித்து சமீபகாலங்களில் பல்வேறு விதமான எதிர்மறை கருத்துக்கள் வலுத்து வருகிறது. இதே போல ஊடகவியலாளர்கள் அடுத்தவர்கள் செய்யும் தவறை தோலுரித்து நிஜ உலகத்திற்கு படம் பிடித்து காட்டவேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் இவர்களில் சிலரும் சமீபகாலங்களில் தாங்களே குற்றவாளியாக அம்பல பட்டு நிற்கும் அவலநிலை
ஆனந்த விகடனில் பணிபுரிந்த
ஒரு பத்திரிகையாளர் ஒரு பெண் மீது பாலியல் அத்துமீறல்செய்த தவறுக்காக கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்ட
நிகழ்வு மறப்பதற்கு முன்பு
அதேபத்திரிக்கையில் பணிபுரியும் அதுவும் ஊடகத்துறையில் நாற்பது வருடங்களாக பணிபுரிந்து பல தலைவர்களிடம் பழகிய கர்வத்தில்
திரு பிரகாஷ் எம் சாமி அவர்கள்
அதேபோன்ற தவறை
செய்து இன்று அகப்பட்டு கொண்டவுடன் கண்ணீர் வடிக்கிறார்
பலருடைய ஆதரவு உள்ளது என்ற தைரியத்தில் இந்த பெண்ணை மிரட்டுகிறார்
இதில் கொடுமை இத்தகைய பத்திரிக்கையாளர்களுக்கு ஆளும் கட்சி
பாஜக கட்சிகளில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தலைவர்களே ஆதரவளிப்பது வெட்கக்கேடு
இப்படி பட்ட பத்திரிக்கையாளர்களை
வெளியேற்றி உண்மையை வெளிக்கொண்டு வந்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தராமல் மௌனம் காப்பது ஆனந்த விகடன் போன்ற பாரம்பரியம் மிக்க
பத்திரிக்கைக்கு அழகல்ல
இந்த இரண்டு பெண்களுக்கு மட்டுமல்ல
இனிவரும் காலங்களில் யாருக்கும்
இத்தகைய தொந்தரவு நிகழாமல் காக்க
வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல
ஊடகங்களுக்கும் உள்ளது
வேலியே பயிரை மேய்ந்தால்
ஊடகங்களுக்கும் பொருந்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக