சனி, 29 செப்டம்பர், 2018

செக்கச்சிவந்த வானத்தை ஏன் வறுக்கிறார்கள் வலைத்தளங்களில் ...

Mani Mathivannan : ரெண்டு நாளா மணிரத்னத்தை பதிவர்கள்
வறுத்தெடுக்கிறார்கள். இதற்காகத்தான் சுஹாசினி அடித்துக் கொண்டார் ஸ்மார்ட் போன் உள்ளவரெல்லாம் படம் பற்றிக் கருத்து சொல்கிறார்களே என்று.
அவரும் அவரது ஆத்துக்காரரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊடகம் என்பது வெகுஜனமயமாகி நாளாகிறது. அத்திம்பேர்கள் மட்டுமே எழுத்தாளராக இருந்த காலத்தில் உங்க வீட்டுக்காரரும் சித்தப்பாவும் ஆளுக்கொரு பக்கம் வெளிநாட்டுப் படங்களை டப்பா அடிச்சி பெரிய படைப்பாளிங்கிற ஹோதாவில் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் வெட்கமின்றி வருடாவருடம் ஆஸ்காருக்கு வேறு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சினிமா விமர்சகர்கள் என்பவர்களின் கூட்டுக் களவாணித்தனத்தின் உதவியுடன்.
இன்றைய யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சித்தப்பா அரசியல் கடைவிரித்துவிட்டார். அம்மையார் இப்போது அறிவுரை சொல்ல வேண்டியது முகநூல் பதிவர்களுக்கல்ல!

Karuppu Neelakandan: ஆனாலும் இந்த உதாவாக்கரையின் படத்திற்கு 140 கும் மேலான திரையரங்குகளை கார்ப்ரேட் வணிகம் ஒதுக்கிதந்து பார்க்கவைக்கிறது அரும்பாடுபட்ட நமது லெனின் பாரதி இயக்கிய மேற்கு தொடர்ச்சி மலைக்கு தியேட்டர் தராமல் படத்தை இன்றோடு வெளியேற்றிவிட்டார்கள்..
 Ashok.R : சற்று யோசித்தால் செ.சி.வானம் லாஜிக் இல்லாத, கேரக்டர் டெப்த் இல்லாத, மிக சுமாரான திரைக்கதையுடன் அமைந்த மிக மோசமான படம். ஆனால் திரையரங்கில் அதையெல்லாம் நாம் உணர முடியாது. போர் அடிக்காததால் ஏதோ போகிறது என உட்கார்ந்திருப்போம். இந்த இடத்தில்தான் இயக்குனராக மணிரத்னம் செமையாக ஜெயிக்கிறார். அதனால்தான் காற்று வெளியிடை போல அப்பட்டமான கெட்ட பெயரை இது வாங்கவில்லை. அதற்கு இன்னொரு காரணம் சிம்புவும், விஜய் சேதுபதியும். புதுமுக இயக்குனராக இருந்தாலும், மணிரத்னமாக இருந்தாலும் நாங்க நாங்களாதான் இருப்போம் என்று மணிரத்னம் டெம்ப்ளேட்டுக்குள் சிக்காமல் அவர்கள் அவர்களாகவே பின்னியிருக்கிறார்கள். படத்தை அதுதான் காப்பாற்றுகிறது. மற்றபடி நாயகன், அக்னி நட்சத்திரம் படங்களை காப்பாற்றிய காட்ஃபாதரிசம் இந்த கொரியன் திரைப்படக் கதை காப்பியையும் ஓரளவு காப்பாற்றியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக