சனி, 15 செப்டம்பர், 2018

கலைஞர் பாணியில் அழகிரி அதிர்வெடி பதில் ... செய்தியாளர் கேள்விக்கு ...

இணைந்து பணியாற்ற ரெடி ONEINDIA TAMIL O கலைஞர்  பாணியில் அப்படி ஒரு பதில் சொன்ன அழகிரி
சென்னை: கலைஞர்  பாணியில் செய்தியாளர் கேள்விக்கு ஒரு நச் பதிலை அளித்து நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தினார், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு அழகிரி சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ரொம்பவே ரிலாக்ஸ்சாக பதில் அளித்தார் அழிகரி.
தன்னை சேர்க்காவிட்டால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில், திமுக 4வது இடத்திற்குத்தான் செல்லும் என்று உறுதியாக தெரிவித்தார் அவர். இணைந்து பணியாற்ற ரெடி:
அப்போது, கேள்வி கேட்ட பெண் நிருபர், ஸ்டாலினுடன், நீங்கள் இணைந்து பணியாற்ற தயாரா என்றார். அதற்கு அழகிரி, "ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராக இருப்பதால்தான் திமுகவில் சேர்த்துக்கொள்ள கேட்டுக்கொண்டேன். இதற்கு முன்பு எத்தனையோ முறை இருவரும், இணைந்து பணியாற்றி உள்ளோம்.




இடைத்தேர்தல்களில் ஸ்டாலின்

திருமங்கலம், திருச்செந்தூர், சங்கரன்கோவில், கம்பம், ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல்களில் ஸ்டாலினும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். என் தந்தை போட்டியிட்ட தேர்தலுக்காக கூட நான் பணியாற்றியுள்ளேன். என்னை திமுகவில் இணைத்துக்கொண்டால் திமுக வலிமை அடையும் என்றார் அழகிரி.



ரஜினிக்கு ஆதரவு

உங்கள் நண்பர் ரஜினிகாந்த் கட்சி துவங்க உள்ளாரே, அதற்கு திமுக தொண்டர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, "ரஜினிகாந்துக்கு அடிமட்ட மக்களிடையே பெரும் ஈர்ப்பு உள்ளது. ரஜினிக்கு எனது தந்தை மீது மிகுந்த பிரியம் எப்போதுமே உண்டு. அதே போல எனது தந்தைக்கும், ரஜினி மீது மிகுந்த அன்பு உண்டு. ரஜினியின் ரசிகர்கள் திமுகவில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கு போக வாய்ப்பு உள்ளது" என்றார் அழகிரி.



கலகல அழகிரி

அடுத்த கேள்வி பதில்தான் ஹைலைட். களத்தில் இப்போது தினகரன் உட்பட நிறைய பேர் உள்ளனர். இப்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? என்று நிருபர் கேள்வி கேட்டு முடிக்கும் முன்பாக, "யார் அதிக ஓட்டு வாங்குகிறார்களோ அவர்கள்தான் ஜெயிப்பார்கள்" என்றார் அழகிரி. இந்த எதிர்பாராத பதிலை கேட்டதும், பெண் நிருபரும் சிரித்துவிட்டார். இறுதியாக, ஏன் நான் ஜெயிப்பேன் என நினைக்க கூடாதா என சிரித்தபடியே கூறிக்கொண்டு பேட்டியை முடித்தார் அழகிரி. கருணாநிதியும் பிரஸ் மீட்டில் இப்படித்தான் நகைச்சுவையாக பதில் அளிப்பது வழக்கம். ஸ்டாலினிடம் அது மிஸ்சான நிலையில், அழகிரி தனது தந்தை பாணியில் பதிலளித்தது அவரது தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக