புதன், 5 செப்டம்பர், 2018

நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார் .. தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன்.

Actor Rocket Ramanathan Passes away tamiloneindia : சென்னை: பிரபல நடிகர் ராக்கெட் ராமநாதன் இன்று அதிகாலை காலமானார்.
ராக்கெட் ராமநாதன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக இருந்தார். பல குரலில் பேசக்கூடிய இவர் தமிழின் முதல் மிமிக்கிரி செய்யக் கூடிய கலைஞர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பலகுரல் மன்னனும் நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 74. மனைவி பெயர் பானுமதி மகள் சாய்பாலா(26) மகன் சாய்குருபாலாஜி(24)
இவர் ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகள் பெற்றவர்.
சென்னை ராயப்பேட்டையில் இவர் வசித்து வந்தார். நாளை (5.9.18 புதன்கிழமை) மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக