சனி, 15 செப்டம்பர், 2018

போலீஸ் அதிகாரியின் மகன் கால் செண்டர் பெண்ணை அடித்து பாலியல் பலாத்காரம் .. விடியோ


மின்னம்பலம் :டெல்லியில் பெண் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் மத்திய உள் துறை அமைச்சகம். .
டெல்லி உத்தம் நகர் பகுதியிலுள்ள தனியார் கால் சென்டர் பெண் ஊழியர் ஒருவரை, வாலிபர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதாகத் தகவல் வெளியானது. இதனை அவரது நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைதளமொன்றில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலாக பரவியது இதையடுத்து, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதியன்று பெண் ஒருவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், அந்த வீடியோவில் இடம்பெற்ற வாலிபர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் என்பதால், இந்த வழக்கில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.இதனையடுத்து, ரோஹித் சிங் டோமர் எனும் அந்த வாலிபர், இன்று (செப்டம்பர் 14) கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில், பாதிப்புக்குள்ளான பெண் இன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது நண்பரின் அலுவலகத்துக்கு வரவழைத்து ரோஹித் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனை போலீசாரிடம் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று கூறி கடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக