வெள்ளி, 14 செப்டம்பர், 2018

மீண்டும் இரட்டைஇலை முடங்குமா அதிமுக அதிர்ச்சி.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Splco Media : அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு, அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது எனவும் கட்சி முடிவு செய்தது. மேலும், அதிமுக சட்டதிட்டங்களில் சில திருத்தங்களும் செய்யப்பட்டன.
இதை எதிர்த்து கே.சி. பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, அதிமுகவில் சட்டவிதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மற்றும் சசிகலா உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், 3 வாரத்துக்குள் பதில் அளிக்கப்பட்டவுடன், அடுத்த 4 வார காலத்துக்குள் அதனை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தனர்.
ஏற்கனவே துணைமுதலவர் ஓ.பி.எஸ்.,தனது உடன் பிறந்த தம்பியின் மருத்துவ வசதிக்காக ராணுவ விமானம் வழங்கியதற்க்காக நன்றி தெரிவிக்க சென்ற போது டெல்லியில் அவரை சந்திக்க மறுத்த பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ., அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட கே.சி. பழனிசாமியை சந்தித்து அரை மணி நேரம் பின்னர் பேசியது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்த ., இப்போது டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பால் இரட்டை இலைக்கும் மீண்டும் ஆபத்து என்ற செய்தியால் கலக்கம் அடைந்துள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக