புதன், 12 செப்டம்பர், 2018

நித்தியானந்தா தலைமறைவு .. பாலியல் பலாத்கார வழக்கில் .. தேடும் பணி தீவிரம் ..

tamilthehindu :பாலியல் பலாத்கார வழக்கில் கைது உத்தரவு: சாமியார்
நித்யானந்தாவை தேடும் பணி தீவிரம் கர்நாடக மாநிலம் பெங் களூருவை அடுத்துள்ள பிடதியில் நித்யானந்தா தியானபீட ஆசிரம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் பெண் பக்தர்களை நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது சீடர் லெனின் கருப்பன் கடந்த 2010-ல் புகார் அளித்தார். இது தொடர்பாக பிடதி போலீஸார் பதிவு செய்த வழக்கு, ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நித்யானந்தா ஆஜராகவில்லை. வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நித்யானந்தா அலட்சியம் காட்டி வருவதாக குறிப்பிட்ட நீதிபதி அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
இதையடுத்து தலைமறைவான நித்யானந்தாவை கர்நாடக சிஐடி போலீஸார் தேடி வருகின்றனர். நேற்று பிடதியில் உள்ள அவரது தியான பீட ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். இதேபோல் கர்நாடகாவில் இருக்கும் நித்யானந்தாவின் மற்ற ஆசிரமங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நித்யானந்தா மீதான வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதாக பிடதி ஆசிரம வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக