ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

கண்களில் ஸ்டெதஸ்கோப் வைத்து பார்ப்பது எதற்காக? சிலவேளைகளில் டாக்டர்கள் ...

Sivasankaran.Saravanan : கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படம் பலரால்
பகிரப்பட்டு வைரலானது. ஒரு டாக்டர் ஸ்டெத்தாஸ்கோப் பை நோயாளியின் கண்ணில் வைத்து பரிசோதிப்பதை அருகிலிருந்து பார்த்த ஒரு நபர் , தன்னை அதி புத்திசாலி smart என நினைத்து டாக்டருக்கு தெரியாமல் அதை படம் எடுத்து அதை முதன்முதலில் வெளியிடுகிறார்.
அவரது நோக்கம் “ ஹே..ஹே.. இந்த டாக்டரை பாருங்க, ஸ்டெத்தாஸ்கோப் ப எப்படி யூஸ் பண்றதுன்னு கூட தெரியாம போயும் போயும் கண் ல வச்சு சோதனை பண்றாரு !” என டாக்டருக்கு ஒன்றும் தெரியாது என நக்கல் அடிப்பதுதான். அதைத்தொடர்ந்து அந்த “ஒன்றும் தெரியாத” டாக்டரை கிண்டல் செய்து பலரும் அதை பரப்புகிறார்கள்.
Stethoscope பின் பயன்பாடு நமக்கு தெரிந்து என்ன ?
டாக்டர் அதை வைத்து இதயத்துடிப்பு செக் பண்ணுவார். சளி இருக்கிறதா என நுரையீரல் இருக்கும் மார்பு பகுதியில் வைத்து பார்ப்பார். ஆக ஸ்டெத்தாஸ்கோப் என்பது சத்தத்தை உணரக்கூடிய கருவி.
அதை எதற்கு இந்த டாக்டர் கண்ணில் வைத்து செக் பண்ணுகிறார் என்பதுதான் பலரது கிண்டலுக்கு காரணம்.
இந்த டாக்டர் காரணத்தோடு தான் இதை செய்திருக்கிறார்.

மூளைக்கு நல்ல ரத்தத்தை கொண்டு செல்லும் வலது மற்றும் இடது carotid arteries களில் ஏதேனும் ஒன்றில் கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பு ஏற்படலாம். அதற்கு Carotid stenosis என்று பெயர். வலது பக்கம் அடைப்பு இருந்தால் இடது கண்ணின் மேல் ஸ்டெத்தாஸ்கோப் வைத்து கேட்டால் bruit சத்தம் கேட்கும். வலது கண்ணில் சத்தம் வந்தால் இடது பக்கம் அடைப்புள்ளது.
அதேபோல தலையில் அடிபட்டு மூளை பாதிக்கும் போது cavernous sinus க்கு உள்ளாகவே artery மற்றும் vein க்குள் abnormal தொடர்பு காரணமாக ரத்தம் மூளைக்குள் செல்லாமல் தடைபடும். இதற்கு பெயர் Carotid cavernous Fistula. இதைக் கண்டறிவதற்கும் கண்ணில் ஸ்டெத்தாஸ்கோப் வைத்துத்தான் பரிசோதிப்பார்கள். எந்த பக்கம் பிரச்சினையோ அந்த கண்ணில் சத்தம் வரும்.
இதுபோக தோல் மீது , முட்டி மீது கூட தேவைக்கு ஏற்ப ஸ்டெத்தாஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் வழக்கம் மருத்துவத்தில் உண்டு.
ஆக இதெல்லாம் எதுவும் தெரியாமல் , என்னவோ எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களை விட தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கும் சில அதி மேதாவிகள் இந்த நிகழ்வை கேலி செய்வது வருந்தத்தக்கது.
ஒரு விஷயத்தை கேலி செய்யும் முன்பு அதைப்பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லை என்பதன் மூலம் படித்த படிப்பும் தொழில்நுட்ப வசதிகள் மட்டுமே ஒருத்தரை அறிவார்ந்த மனிதராக மாற்றிவிடாது என்பது புரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக