திங்கள், 3 செப்டம்பர், 2018

காதலிக்கத் தகுதியற்ற ஆண்கள்!

வெண்பா கீதாயன் - ஓவியம்: சசி மாரீஸ் - ;நீ கூடிடு கூடலே - 47 : 
உறவுகளை அலசும் தினசரி தொடர்
மின்னம்பலம்:  ஆண்களில் காதல் திருமணத்துக்குச் சரிவராத ஆட்களுக்கும் ஒரு பெரும் பட்டியல் இருக்கிறது. தங்களை மிகவும் புனிதப்படுத்திக் கொள்கிற
ஆண்களுடன் பெண்கள் நட்பு பாராட்டுவதைக்கூடத் தவிர்க்க வேண்டும். எந்நேரம் பார்த்தாலும் "என் விரல் உன்மேல பட்டிருக்குமா? உரசாம உக்காரு..., கையப்புடிக்காத, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்..." என்று ஸ்பரிசப்புனிதம் பேசும் ஆண்கள் உண்மையில் நல்லவர்கள் கிடையாது. தங்களுடைய பெர்வெர்சன்களை அடக்கிக்கொண்டு நல்லவன் வேஷம் போட்டுக்கொண்டு இருக்கின்றனர். ஓர் ஆணுடன் திருமணத்துக்குப் பிறகுதான் கைகோத்து நடக்க வேண்டுமென்று கருதினால் அத்தகைய ஆணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
சாதாரணமாக கட்டித் தழுவி அன்பு பாராட்டும் அத்தனை பெண்களும் தீயவர்கள்; ஆண்களுடன் சிரித்துப் பேசும் பெண்கள் கற்பற்றவர்கள் போன்ற கருத்தியல்களுடன் காலங்கழிப்பவர்கள். இன்றைய காலத்தில் பரஸ்பரமாகக் கட்டிக் கொள்ளுதல் மற்றும் நட்புடன் தழுவிக்கொள்ளுதல் போன்றவை சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்ட நிலையில் இன்னும் கைகோத்துக் கொள்ளுதலில் புனிதம் பார்ப்பவர் தனது காதலி சக ஆண்களுடன் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. தப்பித் தவறி திருமணமானால் இன்னும் சிக்கல். நான் எந்தப் பெண்ணுடனும் பேசாமல் இருக்கிறேன், நீ ஆண்களுடன் பேசுகிறாயா என்று பொஸஸிவ் புனிதப் போர் எழும். எனவே, இத்தகைய ஆண்கள் எதற்கும் சரிப்பட மாட்டார்கள்.

எப்போதும் நம்முடைய திறமையையும் உழைப்பையும் மட்டும் பாராட்டிக்கொண்டு நாம் சோர்ந்திருக்கும் வேளைகளில் நமக்கு உறுதுணையாக இல்லாமல் தப்பிக்கக்கூடிய சுபாவம் கொண்ட ஆண்களும் காதலிக்கத் தகுதியற்றவர்கள். ஏனெனில் இவர்களுக்கு நம் புகழ், ஊதியம், திறமை அனைத்தும் தேவைப்படும். ஒரு சில சமயங்களில் எதிர்பாராத சறுக்கல்கள் மேற்குறிப்பிட்டவற்றில் ஏற்பட்டால் இவர்கள் நம்மை எளிதாகப் புறந்தள்ளுவார்கள். இத்தகைய ஆண்களும் காதலுக்கு உகந்தவர்கள் கிடையாது.
அடுத்து முற்போக்குவாதிகள்; அவர்களுக்குத் திருமணத்திலும் சரி, காதலிலும் சரி நம்பிக்கை கிடையாது. தம்முடைய எழுச்சிமிகு குறிகளை மட்டுமே நம்புவார்கள். எனவே அவற்றின்மேல் காதல் சாயம் பூசிக்கொண்டு திரிவதால் அவர்களுக்குக் காதலிகளாக வாய்க்கும் பெண்கள் திருமணத்தை மறந்துவிடலாம். இத்தகைய ஆண்களுக்குக் காதலிக்கவும் வராது; காமத்திலும் பெரிதாக ஒன்ற இயலாது. வைப்ரேட்டருக்கு மாற்றாக இவர்களைப் பாதுகாப்பாக பயன்படுத்தினால் சமூகம் தப்பிக்கும்.
சமூகத்தின் மீது பயம் கொள்கிற ஆண்களும் காதலுக்கு லாயக்கானவர்கள் கிடையாது. ஒரு செல்ஃபி எடுத்து அதை சோஷியல் நெட்வொர்க்கில் பகிர்வதற்குத் தயக்கம் கொண்டாலே அவர் ஒன்றுக்கும் ஆக மாட்டார் என்பது பொருள். காதலில் முக்கியமான பணி சமூகத்தை எதிர்கொள்வதாகும். எங்களின் காதல் அசூயை கொள்ளத்தக்கதன்று என்று சமூகத்தின் முன் பெருமையாக நின்றிட வேண்டும். ஒரு புகைப்படத்துக்குப் பயப்படும் ஆண் நாளை திருமணம் என்றால் இரு வீட்டாரையும் எப்படி எதிர்கொள்வார்? நம்மைத் தாங்கிக் கொள்ளவேண்டிய ஆண் நம் பின்னால் சென்று ஒளிந்துகொள்வதைப் போன்ற இழிவு பிறிதொன்றில்லை.
(காதல் தொடரும்)
(கட்டுரையாளர்:
வெண்பா கீதாயன்
எழுத்தாளர். சமகால நிகழ்வுகள், இலக்கியம், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகளைப் பல்வேறு ஊடகங்களில் எழுதிவருகிறார்.)
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
பீம் (BHIM) Android / IOS
டெஸ் (TEZ) Android / IOS
போன்பே (PhonePe) Android / IOS
பேடிஎம் (Paytm) Android / IOS
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
en.minnambalam.com/subscribe.html
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக