ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

அழகிரி : நான் கலைஞரின் மகன் .. சொன்னதை செய்வேன்! பேரணியில் பொதுமக்களுக்கு இடையூறு கூடாது ...

அழகிரிநக்கீரன் :கலைஞரின் 30ஆம் நாள் நினைவு நாளை முன்னிட்டு, கலைஞர் நினைவிடம் நோக்கி செல்லும் பேரணியில் மக்களுக்கு இடையூறு கூடாது என மு.க அழகிரி ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.5 காலை 10 மணி அளவில் அண்ணாசிலை அருகில் உள்ள காவல்நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும். இப்பேரணியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தர உள்ள கலைஞரின் உடன்பிறப்புகள், எந்தவித ஆரவார, ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறு தராமலும் நடந்த கொள்ள வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செ.சல்மான்.vikatan.com/: வி.சதிஷ்குமார்; சென்னையில் நடத்தவுள்ள அமைதிப் பேரணி குறித்து, ஆதரவாளர்களுடன் அழகிரி 10வது நாளாக இன்று ஆலோசனை நடத்தினார்.
கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கட்சியில் சேர்க்காமல் புறக்கணிக்கப்பட்டு வரும் தன் பலத்தை காட்டும் வகையிலும் சென்னையில் வரும் 5ம் தேதி பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டு வருகிறார் அழகிரி. இதற்காக  மதுரை சத்யசாய் நகரிலுள்ள தன் இல்லம் முன்பாக கடந்த 24 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கினார். இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் 10வது நாளான இன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "நான் தலைவரின் பிள்ளை. சொன்னதைச் செய்வேன். சென்னை அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்" என்றார். அவரிடம்,"மு.க. ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியும், அங்கிருந்து அழைப்பு ஏதும் வரவில்லையே" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதுபற்றி் கருத்துக் கூற விரும்பவில்லை" என்றார். ஆலோசனைக் கூட்டத்தை இன்றுடன் முடித்துக் கொண்டு பேரணி வேலைகளை மேற்பார்வையிட அவர், சென்னை கிளம்புகிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக