திங்கள், 3 செப்டம்பர், 2018

பாசிச பாஜக ஒழிக .. விமானத்திற்குள் மாணவி முழக்கம் தமிழிசை வாக்குவாதம் ,, மாணவி கைது


tamil.oneindia.com -hemavandhana.: விமான நிலையத்தில் இளம் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை-
தூத்துக்குடி விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை இளம் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.
அந்தப் பெண் ஏதோ கூறியதால், கோபமடைந்த தமிழிசை செளந்தரராஜன் அந்தப் பெண்ணுடன் சண்டைக்குப் போய் விட்டார்.
நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சவுந்தராஜன் இன்று கலந்து கொள்ளவிருக்கிறார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு பயணமானார். அப்போது விமானத்தில் தமிழிசையை கண்டதும் சோபியா என்ற மாணவி  பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று பாஜகவுக்கு எதிராக திடீரென கண்டன முழக்கங்களை எழுப்ப தொடங்கினார். இவர் கனடா நாட்டில் ஆரய்ச்சி படிப்பை முடித்து விட்டு தமிழகம்  திரும்பி உள்ள நிலையில்  கைது செய்யப்பட்டுள்ளார். கோவையை சேர்ந்த இவர் கிருஷ்ணசாமி என்பவரின் மகளாவார்.
 எப்படி கூறலாம் அப்படி விமானத்துக்குள்ளேயே தனியாளாக இப்படி பாஜகவுக்கு எதிரான முழக்கமிட்டதை பார்த்து, தமிழிசை உட்பட மற்ற பயணிகள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், பாஜகவை விமர்சித்து கோஷமிட்ட அந்த பெண்ணிடம் தமிழிசை விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 இதையடுத்து, விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய காவல்நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார்.
ஏதோ ஒரு அமைப்பு அந்த புகாரில், ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதல் காரணமே இளம் பெண் தமக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழிசை அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக