செவ்வாய், 18 செப்டம்பர், 2018

கோயில் கவர்ச்சி நடனங்களால் ஒழுக்கம் கெடுகிறதா? .... உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்கிறது ...


மின்னம்பலம் : தமிழகம் முழுவதும் ஆபாச நடன நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் மாநில உள் துறைச் செயலாளர் மற்றும் சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறைச் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பூரி ஜெகன்நாத் கோயில் கலவி சிலைகள்
மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் தமிழகத்திலுள்ள கோயில் திருவிழா, அரசு விழாக்கள், திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆபாசமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
“இதனால் சமூக ஒழுக்கம் கெட்டு, பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. ஆபாச நடன நிகழ்ச்சிகளைக் காவல் அதிகாரிகளே தலைமையேற்று நடத்துகின்றனர். அதனால், அவற்றைத் தடை செய்ய வேண்டும்” என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 18) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உள் துறைச் செயலாளர் மற்றும் சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறைச் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக