திங்கள், 17 செப்டம்பர், 2018

ராஜீவ் காந்தி கொலையாளிகள விடுதலை ,, இன்று முடிவு தெரியும்?

தினமலர் :புதுடில்லி : ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக 2014-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. காங்கிரசை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. 'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பலாம்' என சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வே இந்த வழக்கையும் விசாரிக்கிறது. அதனால் ஏழு பேர் விடுதலை தொடர்பாக இன்று முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக