வியாழன், 27 செப்டம்பர், 2018

வளர்ப்பு நாயை கொன்ற கணவன் கைது .. வேலாசேரி..

 நாயை தர மறுப்பு
 பரணியின் பெருமைtamiloneindia :சென்னை: தான் உயிரையே வைத்திருந்த "பரணி"யை கொன்றுவிட்ட கணவனை போலீசில் மாட்டிவிட்டதுடன், சிறைக்கும் அனுப்பியுள்ளார் கட்டிய மனைவி.
சென்னை  வேளச்சேரியில் உள்ள சாரதி நகரில் வசித்து வருபவர் ஜெகநாத். இவர் செல்வி என்பவரை 5 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். பின்னர் 6 மாதத்திற்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். செல்வி திருமணத்துக்கு முன்னமேயே ஒரு நாயை செல்லமாக வளர்த்தும் பராமரித்தும் வந்தார். அந்த நாயின் பெயர்தான் பரணி. பரணியை பற்றி செல்வி ஜெகநாத்திடம் காதலிக்கும்போதே அடிக்கடி பெருமையாக சொல்லி வந்திருக்கிறார். செல்விக்கு திருமணம் ஆனவுடன் பரணி நாயும் கூடவே வந்துவிட்டது.;

ஆனால் நாய் வீட்டில் இருப்பது ஜெகநாத்திற்கு பிடிக்கவேயில்லை. அடிக்கடி தொந்தரவு தருவதாக நினைத்தார். அதனால் செல்வியிடம் நாயை வெளியில் கொண்டு போய்விட்டு விடலாம், அல்லது வேறு யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று ஜெகநாத் சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கு செல்வி பிடிவாதமாக மறுத்துள்ளார். இதனால் 6 மாதமாக இந்த நாயை வைத்தே இருவருக்குள் பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருந்தத> எங்கு சென்றாலும் நாயையும் கூடவே செல்வி கூட்டிக் கொண்டு போவதால் பிரச்சனை அதிகமாகி கொண்டே வந்தது.

ஒருநாள் இந்த சண்டை முற்றி, ஜெகநாத் செல்வியின் கழுத்தை ஆத்திரத்தில் நெறித்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்வி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் நாயை தன்னுடன் கூட்டி செல்லவில்லை. 4 நாள் கழித்து மீண்டும் தன் வீட்டுக்கு வந்தார் செல்வி. அப்போது, பரணி நாய், காயங்களுடன் சுருண்டு கிடந்ததை கண்டார்.

 உடனே பதறியடித்து கொண்டு நாயை தூக்கி கொண்டு கால்நடை மருத்துவரிடம் சென்றார். ஆனால் சிகிச்சை அளித்தும் கொஞ்ச நேரத்தில் பரணி இறந்துவிட்டது. இதனால் கதறி வெடித்து அழுதார் செல்வி. பின்னர், தனது கணவர், நாயை அடித்து கொன்றதாக கூறி வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார் செல்வி. அதன் அடிப்படையில், ஜெகநாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக