இந்த நிலையில் தமிழிசை செளந்திரராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோபியா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் சோபியா விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் தமிழிசை செளந்திராஜன் உட்பட 10 பேர் கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை சாமி என்பவர் காவல் நிலையத்தில் புகார். அளித்துள்ளார். சோபியாவின் தந்தை புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் மாறி மாறி புகார் கொடுத்துள்ளதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக