திங்கள், 3 செப்டம்பர், 2018

குடும்ப குத்து விளக்கு அபிராமியின் முகநூல் கூறுவதென்ன? குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் ஒரு பக்தி பழம் ..

Shalin Maria Lawrence : அந்த குழந்தைகளை கொன்ற பெண்ணின் முகநூல்
பக்கம் சென்று பார்த்தேன்.
முகநூலில் முக்கால்வாசி ஆண்களும் பெண்களும் பெண்ணியத்தை திட்டி கொண்டிருந்தார்களே ஒரு வேளை அந்தப்பெண் அப்படி ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று பார்க்க தூண்டியது அவ்வளவே.
உள்ளே போய் பார்த்தால் வாட்ஸ்ப் வதந்திகள் ,தமிழன்டா கலாச்சார தகவல்கள் ,மதம் சார்ந்த அநேக பக்தி பதிவுகளுக்கு நடுவில் குழந்தைகளோடு அவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள்.
நெற்றியில் சதா காலமும் மத அடையாளம் ,கழுத்திலும் கொட்டை என்று இருந்தது.
ஆக உங்களின் முட்டாள் லாஜிக் படி பார்த்தால் அவரின் தமிழ் கலாச்சார ஈடுபாட்டையும் ,ஆன்மீக ஈடுபாட்டை தான் திட்ட வேண்டும்.அதுவே தவறுதான்..இது தனிமனித குற்றம்.
வெளியில் இருந்து பார்த்தால் ,பெண்ணியம் பேசாமல் ஒரு குடும்ப குத்து விளக்கு எப்படி இருப்பாரோ அப்படி இருக்கிறார்.
தப்பி தவறி கூட பெண்ணியம் ,சமூக நீதி பற்றிய பதிவுகளோ எழுத்துக்களோ இல்லை.
ஆக பெண்ணியம் பேசுபவர்கள்தான் தவறு செய்பவர்கள் ,ஆண்கள் விரும்பும் உதாரண புருஷிகள் தவறு செய்ய மாட்டார்கள் என்று இன்னும் ஆண்கள் நம்பி கொண்டிருப்பது வடிகட்டிய மூடத்தனம்.

இங்கிருக்கும் ஒரு சில அறைவேக்காடுகள் ஒழுக்க நெறி தவறி நடக்க பெண்ணிய சாயம் பூசி கொள்ளுவதை எல்லாம் பெண்ணியம் என்று நம்பும் இவர்களது சிந்தனையும் மடத்தனம்தான்.
ஏனென்றால் உண்மையாக பாலின சமத்துவம் பேதம் பேசி கொண்டிருக்கும் பெரியாரிய ,அம்பேத்கரிய பெண்கள் கோவிலுக்கும் செல்லுவதில்லை ,குழந்தைகளை கொல்லுவதும் இல்லை ,இந்த சைக்கோக்களுக்கு வக்காலத்து வாங்குவதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக