வியாழன், 6 செப்டம்பர், 2018

ஜல்லிகட்டு போரட்டத்தில் மாணவர்களை தாக்கிய ஜார்ஜ் (மலையாளி) வீட்டில் விடிய விடிய சோதனை


splco.me : குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்ற சிபிஐ அதிகாரிகள் சோதனை விடிய விடிய நடந்து தற்போது தான் நிறைவடைந்தது.
சோதனையின் முடிவில் 7 அதிகாரிகள், 2 பைகளில் ஆவணங்களை எடுத்து சென்றனர். குட்கா முறைகேட்டில் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 35 பேரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நேற்று சென்னை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணகள் குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள ஜார்ஜிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது, குட்கா வழக்கில் லஞ்சம் பெற்றதாக 30 அதிகாரிகள் மீது அதன் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பினீர்கள்.

ஏதாவது ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா, மாதவராவ் டைரியில் உங்கள் பெயரும் உள்ளது. அப்படி இருக்கும் போது, 30 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பியது எதற்கு உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டனர். பின்னர் ஜார்ஜ் அளித்த பதிலை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால், விரைவில் மேலும் சில அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், தற்போது விசாரணை நடத்தியவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஜார்ஜ் தான் இவர் சென்னை கமிஷனாராக இருக்கும் போது அப்போதைய பாஜக பிரதமர் மோடி மற்றும் அதிமுக அரசின் ஓபிஎஸ் அரசின் வழிகாட்டுதல்படி அமைதியாக மெரினாவில் போராடி கொண்டு இருந்த மாணவர்களை விடியல் காலையில் இரக்கமின்றி ரத்தம் சொட்ட சொட்ட அடித்தால் அவர்கள் கடலுக்கு ஒடி அங்கே போராடும் நிலைக்கு காரணமாக இருக்க ஆணை பிறப்பித்தவர் என்பதும் குறிப்பிடதக்கது .
மேலும் குட்கா ஊழலில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சம்பத் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி அவரது வீட்டுக்கும் சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக