ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

மதுரையில் எய்ம்ஸ் அமையாது? மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை

Samayam Tamil   :மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை
அமைந்தே தீரும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவலால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படாது என்ற கருத்து தவறானது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஆர்டிஐ-ல் எப்போது அமைக்கப்படும், நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுவரை மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தகவல் கிடைத்துள்ளது.


தமிழிசை பதிலடி:இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழிசை, “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பூர்வாங்கப்பணிகள் அனைத்தும் படிப்படியாக துறைவாரியாக மத்திய மாநில அமைச்சகங்களில்அரசாங்க நடைமுறைப்படி செய்யப்பட்டுவரும் சூழலில் இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதுமே நிதிஒதுக்கி அரசாணை வரும் என்பது நடைமுறை.” என பதிவிட்டுள்ளார். மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து சரியான விளக்கமளித்துவிட்டார் என கூறியுள்ளார். < எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து காங்கிரஸ் அரசை விட மோடி அரசு வேகமாக செயல்படுகிறது என்பதை, “காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60ஆண்டுகளில் வந்தது 9இடங்களில் மட்டுமே.ஆனால் கடந்த 4ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி” என பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக