திங்கள், 17 செப்டம்பர், 2018

மகிந்த ஜனாதிபதி தேர்தலை இரு வருடங்களுக்கு முன் ஏன் நடத்தினார்? தொடரும் போர் குற்ற விசாரணைகள் காரணம் ..

Ajeevan Veer : மகிந்த ஜனாதிபதி தேர்தலை இரு வருடங்களுக்கு முன் ஏன்
நடத்தினார்? - மகிந்த சமரசிங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு 2015. மார்ச் மாதத்தில் ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு பெரும் பிரச்சனை இருந்தது.
அங்கே கடுமையான ஒரு அறிக்கையைக் கொண்டு வரத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அந்த அறிக்கையில் போர் புரிந்த அவருக்கும் , அவரது சகோதரர் கோட்டபயவுக்கும் , யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் எதிரான குற்றப் பத்திரிகை தயாராகி இருந்தது.
அந்த கடும் அறிக்கைக்கு நிச்சயம் ஒப்புதல் கிடைக்கக் கூடியதாக அதை தயாரித்தோர் செயல்படுவார்கள் என அவருக்கு தெரிந்தது. அதனடிப்படையில் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது.
அதை மகிந்த அறிந்து வைத்திருந்தார். அதற்கு இடமளித்து பொருளாதார தடை ஏற்பட்டால் , அதற்கு 2 வருடங்களுக்கு பின் வரும் எந்தவொரு தேர்தலிலும் தன்னால் ஒருபோதும் வெற்றி பெறவே முடியாது என உணர்ந்தார்.
மக்கள் பசி தாங்காமல் வீதிக்கு இறங்குவார்கள்.போராட்டங்கள் வெடிக்கும். இதிலிருந்து எப்படி தான் மீளுவது? அதற்காகவே 2 வடங்களுக்கு முன் தேர்தலை நடத்தினார். தன்னை மின்சார நாற்காலிக்கு கொண்டு போகப் போகிறார்கள் எனும் பரப்புரையை செய்யத் தொடங்கினார்.

அதிலிருந்து என்னை காப்பாற்ற எனக்கு மீண்டும் வாக்களியுங்கள் எனத் தேர்தலின் கோசமாக்கினார். இதுதான் நடந்தது.
ஜனாதிபதி மைத்ரிபால, வந்தபின் அதில் சில மாற்றங்களை கொண்டு வந்து அவர்களை மட்டுமல்ல , உங்களையும் காப்பாறியுள்ளர். ஆனால் அந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை என்பதை நான் உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும். இன்னும் அந்த விடயம் அங்கே உள்ளது. மைத்ரி இருக்கும் வரை அது செயல்படாது.
மகிந்த அல்லது அவர்களது ஒருவர் மீண்டும் ஜனாதிபதியானால் அந்த விவகாரம் மீண்டும் தலை தூக்கும். அதன் பின்னர் பொருளாதார தடை ஒன்று வரும். இப்போது சிலர் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறை சொல்கிறார்கள். ஆனால் கடந்த காலத்துக்கு சென்று யோசித்தால் நான் சொல்வது என்ன என்று புரியும் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக