வெள்ளி, 28 செப்டம்பர், 2018

BBC :20 வயது 65 வயது காதல் திருமணம் .. ராமேஸ்வரத்தில் பிரிய மறுத்த தம்பதிகள்

வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன்? என்பது குறித்து
கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.
"காதலுக்கு வயது இல்லை என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.
தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.

அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர்.
இதில் இன்னொரு தகவல் என்னவென்றால் பஞ்சாப் போலீசாருடன் மகத்தின் தந்தையும் வந்து மகளை உடன் வருமாறு அழைத்ததற்கு மகத் கூறிய சில பதில்கள் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது.
"வாழ்ந்தால் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன்தான் வாழ்வேன். என் கணவரை என்னைவிட்டு பிரித்துவிடாதீர்கள்" என கதறி அழுது கெஞ்சி இருக்கிறார். பொருந்தாத இந்த காதல் பற்றி பஞ்சாப் மற்றும் ராமேசுவரம் போலீசார் எடுத்துக்கூறியும் அதை மகத் பொருட்டாகவே கருதவில்லை.
3 மகன்கள், ஒரு மகளுக்கு தந்தையான ஜெய்கிருஷ்ணனிடமும் போலீசார் பேசிப்பார்த்தனர். அவரின் மகள் வயதுடைய மகத்தை விட்டு விலகி விடுமாறு போலீசார் கேட்ட போது அவரும் பிரிய மறுத்திருக்கிறார்" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக