வியாழன், 27 செப்டம்பர், 2018

5000 கோடி ரூபாய்களோடு நைஜீரியாவுக்கு தப்பி ஓடிய குஜராத்தி பாஜக கும்பல்...சன்தீசரா குடும்பம்

Mahalaxmi : 5000 கோடி கோவிந்தா.. கோவிந்தா... பிரதமர் மோடியின் சொந்த
மாநிலமான குஜராத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் என்னும் நிறுவனத்தின் தலைவரான நித்தின் சன்தீசரா இந்திய வங்கிகளில் சுமார் 5000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டுத் தற்போது நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.
இவரைக் கடந்த ஒரு மாதமாகச் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தேடி வரும் நிலையில், துபாயில் இவர் பிடிபட்டுள்ளதாகத் தகவல் வெளியானது ஆனால் அவர்கள் துபாயில் இருந்து நைஜீரியாவிற்குத் தப்பி இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்க துறைக்கும் கிடைத்த தகவல்கள் படி நித்தின் சன்தீசரா மற்றும் இவரது சகோதரர் சேட்டன் சன்தீசரா மற்றும் தீப்திபென் சன்தீசரா ஆகியோர் நைஜீரியாவில் மறைந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.
பைஜிரியா உடன் இந்தியா Mutual Legal Assistance Treaty ஒப்பந்தம் கையெழுத்து செய்யாத காரணத்தால் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ரைஜிரியாவில் இருந்து இவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர மிகவும் கடினம்.

ஏற்கனவே விஜய் மல்லையா லண்டனிலும், மெஹூல் சோக்சி ஆன்டிகுவா தீவிலும் இருக்கிறார்கள் இந்த நாடுகளுடன் இந்தியா அதிகளவிலான நட்புறவை வைத்துள்ள போதிலும் இவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவது என்பது பெரிய தலைவலியாக இருக்கும் நிலையில் நித்தின் சன்தீசரா மற்றும் அவரது குடும்பம் திட்டமிட்டு நைஜீரியாவிற்குச் சென்றுள்ளனர்.
ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் பெயரில் செய்யப்பட்ட 5000 கோடி ரூபாய் மோசடி ஈடுபட்டு உள்ளதாகச் சிபிஐ மற்றும் அமலாக்க துறை நித்தின், சேட்டன், தீப்தி, ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ், விலாஸ் ஜோஷி, தணிக்கையாளர் ஆன ஹோமன்த் ஹைத் மற்றும் ஆந்திர வங்கியின் முன்னாள் தலைவர் அனுப் கார்க் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நித்தின் சன்தீசரா மற்றும் அவரது குடும்பம் வங்கியில் வாங்கிய கடனை சுமார் 300 போலி நிறுவனங்கள் பெயரில் துவங்கப்பட்ட இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில் பணப் பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளார்.
மேலும் நிறுவன கணக்குகளில் பல மோசடி செய்து 5000 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக