வியாழன், 13 செப்டம்பர், 2018

மல்லையாவும் ஜெட்லியும் அமர்ந்து 20 நிமிடங்கள் பேசினர், சிசிடிவியை சோதிக்கலாம் - காங். எம்பி

மல்லையாவும் ஜெட்லியும் அமர்ந்து 20 நிமிடங்கள் பேசினர், சிசிடிவியை சோதிக்கலாம் - காங். எம்பிமாலைமலர் : நாட்டை விட்டு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் மல்லையாவும், அருண் ஜெட்லியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்க்கலாம் என காங்கிரஸ் எம்.பி புனியா கூறியுள்ளார்.
புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.
நேற்று கோர்ட்டில் ஆஜரான விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். ஆனால், அருண் ஜெட்லி இதனை மறுத்திருந்தார். மல்லையாவின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டதால் இந்த விவகாரம் பரபரப்பு அடைந்தது.

இதனால், அருண் ஜெட்லியை மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், நாட்டை விட்டு மல்லையா வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பாராளுமன்ற மத்திய ஹாலில் அருண் ஜெட்லியும், மல்லையாவும் 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தால் அது உண்மை என தெரியவரும் எனவும் புனியா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக