சனி, 1 செப்டம்பர், 2018

ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டை - சீட்டு விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டை - சீட்டு விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம்மாலைமலர் : ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை மற்றும் சீட்டு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவுக்கு இன்று 2 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல், இறுதிச்சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாய் துஸ்மதோவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். 

இவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இதன்மூலம் குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 75 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் கிரிஷன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இதேபோல் இன்று நடைபெற்ற சீட்டு விளையாட்டிலும் இந்தியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக