வியாழன், 2 ஆகஸ்ட், 2018

சிலை கடத்தலும் H Raja வும்

Venkat Ramanujam :   Gayathri Karthik அவர்கள் எழுதிய பதிவில் உட்கருத்தை
எடுத்து சில திருத்தங்கள் செய்து ..
மே 31 2018 :குஜராத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகளை IG (Idol Wing ) பொன் மாணிக்கவேல் மீட்டு வந்தார்..ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி ஆரவார வரவேற்பு.
"தமிழகத்தில் 7000 சிலைகள் திருடப்பட்டிருக்கின்றன, கோவிலில் பணிபுரிபவர்களும் அர்ச்சகர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்"_
IG பொன்மாணிக்கவேல் பேட்டி.....ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி சங்கிகள் பதுங்கு குழிக்குள் பாய்ச்சல்..
ஜூன் 21 2018 : பாஜக பொது செயலாளர் எச் ராஜா எடப்பாடி சந்திப்பு.
ஜூன் 27 2018 : தன்னை பணியிட மாற்றம் செய்ய முயல்வதாக ஐஜி பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார்
ஜூலை 20 2018 :நீதிமன்றம் கண்டனம்..
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைத்தது உயர் நீதிமன்றம்.
ஆகஸ்ட் 1 2018 : விசாரணையை சிபிஐ-க்கு கொடுப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்..

நிற்க ..
மோடி ஆட்சி காலத்தில் தமிழக சாமி சிலை கொள்ளையில் தமிழக சில பல #rss #பாஜக வினர் கைகளில் சிலை கடத்தல் ரத்தம் என்றால் இதை அவர்களால் மறுக்க முடியுமா..
அருள் கூர்ந்து சிந்தித்து கேள்வி கணை தொடுப்பீர் . காரணம் இங்கு ஏன் என்ற கேள்வி கேட்கமால் மனித வாழ்க்கை இல்லை..
வாழ்விவின் அடிப்படையே கேள்வி தான்..அதுவே நாகரிகத்தை நமக்கு கற்று கொடுக்கும் ஒழுக்கமான ஒரே வேள்வி ..
கோவில் சிலை திருடர்களே இந்து மதத்தின் பிரதிநிதி என வேஷமிட்டால் .,
கோவில் சிலை திருடர்களே தாங்கள் தான் இந்து மத பாதுகாவலர்கள் என கோஷமிட்டால் .,
இந்த பூமி சிரிக்காதா அந்த சாமி சிரிக்காதா..
Please BJP RSS Please answer .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக