ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

சிறையில் வளர்மதி உண்ணாவிரதப் போராட்டம்! விடியோ


மின்னம்பலம்:  சென்னையில் போலீஸாரைத் தாக்கியதாகக் கூறி, கல்லூரி மாணவியும் சமூகச் செயற்பாட்டாளருமான வளர்மதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் தப்பட்டையை அடித்துக்கொண்டு இயற்கை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் கடந்த 23ஆம் தேதி கேரளாவுக்கு நிவாரண நிதி திரட்டிக்கொண்டிருந்தனர்.
அப்போது, ஸ்டாலின் என்ற போலீஸார் வளர்மதியைப் புகைப்படம் எடுத்துள்ளார். புகைப்படம் எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி வளர்மதியும், அவரது நண்பர்களும் போலீஸ் ஸ்டாலினிடம் கேட்டதற்கு, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் வளர்மதி உட்பட ஆறு பேரை பெரியமேடு போலீஸார் கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை இவர்களைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வளர்மதி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக மாணவி வளர்மதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இவர், நடந்த சம்பவத்துக்குக் காரணமான போலீஸ் ஸ்டாலின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக