புதன், 22 ஆகஸ்ட், 2018

மாணவியை உதவி பேராசிரியருக்கு ... வலை விரித்த வார்டன் ... சிக்கிய மிரட்டல் ஆடியோ

Kalai Mathi - FOLLOW ONEINDIA TAMIL : திருவண்ணாமலை: அரசு வேளாண் கல்லூரியில் மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு விடுதி வார்டன்கள் பேசும் பேச்சு வைரலாகியுள்ளது. 
 சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். 
இந்நிலையில் கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
இரவு முழுவதும் கல்லூரி விடுதிக்கு வரும் உதவி பேராசிரியர் தன்னுடன் படுக்கையை பகிருமாறு வற்புறுத்துவதாகவும் இதுதொடர்பாக விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதாவிடம் புகார் அளித்தார் மாணவி. 
 
 ஆனால் வாடர்ன்களோ தங்கபாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்று எனக் கூறி மாணவியை பிரைன்ட் வாஷ் செய்துள்ளனர். இது ஒரு சின்ன மேட்டர், தங்கபாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்றிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் மறந்துவிடு. 
 
தங்கபாண்டியன் உன்னை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைப்பதுடன், பெரிய லெவலுக்கு கொண்டு போவார். இதே கல்லூரியிலேயே நீ பேராசிரியராக வரலாம். அவருக்கு ரெண்டாம் தாரமாகவும் ஆகி வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்' என்றும் மாணவியிடம் பேசி வலை விரித்துள்ளனர். 
 
 மேலும் ஒரு நாள் தங்கபாண்டியன் சாருடன் அட்ஜஸ்ட் செய்துவிட்டு நடந்தவற்றை மறந்துவிடு என்றும் விடுதி வார்டன்கள் தெரிவித்துள்ளனர். எத்தனையோ பேர் இதுபோல் இருந்துவிட்டு இப்போது வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். 
 
 நீ என்ன புகார் கொடுத்தாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவோம், உனக்கு எதிராக ஆதாரங்ளை நிரூபிக்க முடியும் என்றும் வார்டன்கள் மாணவியை மிரட்டியுள்ளனர். பெரிய டிஜிபியே ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் உனது பெற்றோர் கேட்டால் நீ வரவே இல்லை என்றும் கூறிவிடுவோம் என தெனாவட்டாக பேசியுள்ளனர் 
 
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த பயம் கொஞ்சமும் இன்றி விடுதி வார்டன்களாக உள்ள புனிதாவும் மைதிலியும் மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு கூறியிருக்கும் ஆடியோ வைரலாகியுள்ளது. விடுதி வார்டன்களாக உள்ள புனிதாவும் மைதிலியும் அக்கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக