ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

சென்னை. குழந்தைகள் உடலில் ஊசியால் குத்தி எலுமிச்சையை தொங்க விட்டு ,, துடித்து கதறிய குழந்தைகள்

இன்று சென்னை புலியாந்தோப்பு பகுதியில் உள்ள ஶ்ரீ முன்ட கன்னியம்மன்
கோவிலில் எங்கள் செல்வங்கள் பழம் குத்தப்பட்டது". இந்த அநியாயத்தை இதுவரை  போலீஸ். மற்றும் தமிழக  அரசு,  குழந்தைகள் நல வாரியம் எல்லாம் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள். தேவையே இல்லாத விடயங்களில் எல்லாம் பொழுது போக்கும் என் ஜி ஓக்கள் எல்லாம் என்ன செய்துகொண்டு இருக்கின்றன. ? 

விஜயசக்கரவர்த்தி : சின்ன வயசுல நிறைய பார்த்திருக்கேன் இந்த கொடுமைகளை. அரை லூசுங்க.. அதுங்க குத்திக்க வேண்டியதுதானே. குழந்தைகளுக்கும் எதுக்கு குத்தி விடுதுங்க. மொட்டை அடிப்பதும் காது குத்துவதுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைதான்னு சொல்லுவேன். நீங்க பெத்து போட்டதால அந்த உடல் மேல் உங்களுக்கு என்ன அதிகாரம்.
வட சென்னை பாலா பாலாஜி : எங்கள் பகுதி தான் முன்பு விட இது குறைவு என் என்றால் கிருஸ்துவ மதம் மாற்றம் மக்கள். தமிழ் நாட்டில் எல்லா மாரியம்மன் கோவில் திருவிழாவில் இது போன்ற நிகழ்வு நடப்பது உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக