சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய தேமுதிக தலைவர்
விஜயகாந்த் இன்று அதிகாலை மறைந்த திமுக தலைவர் கலைஞர் நினைவிடத்திற்கு
சென்று அஞ்சலி செலுத்தினார்
சென்ன
திமுக தலைவர் கலைஞர்
கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக
சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் நேரில் சென்று
அஞ்சலி செலுத்தினர். அச்சமயம் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அமெரிக்க
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் நேரில் அஞ்சலி முடியவில்லை.
இருப்பினும், அமெரிக்காவில் இருந்த படி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி
பிரேமலதா ஆகியோர் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்
வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
இந்நிலையில்
அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை சென்னை
திரும்பிய விஜயகாந்த், விமானநிலையம் வந்தடைந்ததும் நேராக கருணாநிதியின்
நினைவிடம் இருக்கும் மெரினா கடற்கரைக்கு வந்தடைந்தார். அங்கு தனது மனைவி
பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷூடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்கார் படப்பிடிப்புக்காக அமெரிக்கா
சென்றிருந்த நடிகர் விஜய், சென்னை திரும்பியதும் நேரடியாக மெரினா சென்று
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக