மாலைமலர்: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை
குறித்து மு.க.ஸ்டாலினிடம்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விசாரித்தார்.
கருணாநிதி உடல் நலம்- ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் இலங்கை பிரதமர் ரணில் சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக