வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

சென்னை திமுக நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு

மாலைமலர் :சென்னையில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி
நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
திமுக முன்னாள் எம்.பி டி.ஆர் பாலு ஸ்டாலின் சார்பாக அமித் ஷாவை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். சென்னை பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு மு.க ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக