புதன், 8 ஆகஸ்ட், 2018

கலைஞரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீண்டிய பார்ப்பன பாம்புகள்

ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வந்த ஜாதீய சிறுமை விலங்குகளை
உடைத்து எறிந்ததில் இந்த சிறுவனின் பங்கு என்ன சாதரணமானதா?
இவனை மேலங்கி அணியாதே என்றது ஒரு பள்ளிக்கூடம்.
உனக்கு இங்கே இடமில்லை என்றது இன்னொரு பள்ளிக்கூடம் .. போராடினான்,... வென்றான் ..
அவனே பின்பு கால ஓட்டத்தின் ஒரு நூறு ஆண்டுகள் எனற பள்ளிக்கூடமும் ஆனான் .
கோவில் கருவறைகளில்தான் ராஜ்ஜியங்களே சட்டங்களை சரி பார்த்தன!
மேல்படிப்பு படிக்கும் உரிமைகளும் அவர்களுக்கேதான்
இந்த பார்ப்பனீய அடிமை யுகத்தை உடைத்தெறிய புறப்பட்ட பெரியாரின் பிள்ளையானான் இந்த் சிறுவன் .
வெட்டி வா கருணா நிதி என்று பெரியாரும் அண்ணாவும் கூறினால் கட்டி வரும் தம்பியானான் இந்த சிறுவன்.
ஆட்சி அதிகாரம் கிடைக்கு முன்பே தமிழகத்தின் காட்சிகளை மாற்றிய பெரியார் பாசறையில் பேரறிஞர் அண்ணாவின் வீரத்தளபதியானான் இந்த சிறுவன்.
இவன் இருக்கிறான் என்ற தைரியத்தில்தானோ ஓராண்டு ஆட்சியிலேயே உறங்க போய்விட்டார் அண்ணா.
கல்வியில் ஆதிக்க ஜாதியின் அடிமடியிலேயே கைவைத்தான்!
பார்ப்பனீயத்தின் கோட்டையான ஆணாதிக்க வாதிகளின் சொத்துரிமை கோட்பாட்டை தகர்த்து பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தான்.
கோவில் கருவறைகளில் கோலோச்சி கொண்டிருந்த பார்ப்பனீயம் வரலாற்றில் நினைத்தும் பார்த்திராத வெடியோசை இவன் வாயில் இருந்துதான் வந்தது ..
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்!
என்ன துணிவு இவனுக்கு என்று நெஞ்செல்லாம் வஞ்சம் பொங்க அடிபட்ட நாகம் போலானது பார்ப்பனீயம்!
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீண்டி கொண்டே இருந்தது.!


..
இந்தியாவிலேயே முதன் முதலில் மனிதனை மனிதன் இழுக்கும் ரிக்ஷாக்களை ஒழித்தது வேறு யார்?
இந்தியாவிலேயே முதலில் குடிசைகளை ஒழித்து ... அடுக்குமாடி கண்டது ...
இலட்சக்கணக்கில் முதியோர்கள் கண்புரையோடி... அந்நாளில் இந்தியாவில் அவர்களை யாரும் கவனித்ததே இல்லை. ஆனால் தமிழகத்தில் இலவச கண் சிகிச்சையும் தங்கி இருப்பு வசதியும் உணவும் தந்து கரையேற்றியது கலைஞர் அரசு!
கலைஞர் பெருமகனின் சாதனைகளை பட்டிபோட்டால் அது பெரிய புத்தகம் ஆகிவிடுமே.
ஆதிக்க வாதிகள் ஒழிந்திருக்கும் ஒவ்வொரு குகையாக தேடி தேடி அழித்த ஒரு போர்வாள் போன்றது இவரது வாழ்க்கை .
1975 இல் பறிபோன இந்திய துணைக்கண்டத்தின் ஜனநாயகத்தை காப்பாற்றிய நெப்போலியன் போனபார்ட் எங்கள் திராவிடம் தந்த தீரர் கலைஞர்.
சமூகநீதி காவலன் வி பி சிங்கை மத்தியில் பிரதமர் ஆக்கி முழு இந்தியாவுக்கும் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த செயலை ஆதிக்க ஜாதி மறக்குமா? அதுதானே 2 G போன்ற விஷ பாம்புகளை விட்டு கடிக்க விட்டார்கள்.
பாம்பை விட கொடியது பார்ப்பனீயம் என்று செயல் முறையில் காட்டியது அது .
இவர் கொடுக்கும் மருந்துகளின் கசப்புக்களால் பல நோயாளர்கள் இந்த் வைத்தியனை எதிரியாக கருதினார்கள்!
என்ன செய்வது ? ஆனால்
அப்படி ஏராளமான நோயாளர்கள் பின்பு நோய் நீங்கினார்கள் என்பது வரலாறு!
உலக தமிழர்கள் மட்டுமல்ல இந்திய மாநிலமொழி பேசும் இன மக்களும் இந்தியாவின் நலிவடைந்த சமுக மக்களும் ஒரு போதும் மறக்கவே கூடாத பெயர் கலைஞர் கருணாநிதி!
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக