புதன், 1 ஆகஸ்ட், 2018

திமுகவுக்குள் ஆர் எஸ் எஸ் சிலிப்பர் செல் .. பிரியாணி குண்டர்கள் ... யுவராஜ் திவாகர் நீக்கம்!


மோடி நிர்மலா 8 ஊடக முதலாளிகளை சந்தித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நம்புவோம்
Nethaji : சென்னையில் பிரியாணிக்காக ஒரு கடையில் சண்டை போட்ட திமுகவைச் சேர்ந்த யுவராஜ் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் இயக்கத்தில் இருந்து வந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதை வைத்து பார்க்கும்போது இது எதேச்சையான சம்பவம் என்று கடந்து செல்ல முடியவில்லை .
கடந்த 5 நாட்களில் தொலைக்காட்சிகளில் முகநூல்களில்
திமுகவை பற்றிய செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட எதிர்மறை எண்ணத்தை தகர்க்கும் வகையில் தொலைக்காட்சிகளிலும் முகநூல் நண்பர்கள் நடத்திய திமுகவின் தமிழர்களுக்கான செயல்பாட்டை தெளிவுபடுத்திய நிலையில் திமுகவின் வாக்கு சதவிகிதம் மக்கள் மத்தியில் சற்று அதிகரித்து அதிகரித்து இருக்கிற வாய்ப்பு நிச்சயமாக உள்ளது .

இதை முறியடிக்கும் வகையில் திமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த சம்பவம் திட்டமிட்டு அந்த ஸ்லீப்பர் செல் நபரால் நடத்தப்பட்டுள்ளது எனக் கருதுகின்றேன் .

ஏனென்றால் மற்ற கட்சிகளும் ஆர் எஸ் எஸ் இருக்கும் முக்கிய வேறுபாடு என்றால் மற்ற கட்சிகளில் ஒரு திமுகவை சேர்ந்த நபர் திமுகவிலேயே இருப்பார் அதிமுகவை சேர்ந்த நபர் அ.திமுகவிலேயே இருப்பார் இருக்க வேண்டும்
ஆனால் ஆர் எஸ் எஸ்ஸில்
அந்த கட்டுப்பாடு கிடையாது. சங்பரிவார் இயக்கங்களின்் திட்டம் நிறைவேற வேண்டும் .
அதன் உறுப்பினர்கள் அதன் இயக்கத்திலேயே இருக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
இது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நக்கீரன் : சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி தீர்ந்து போய்விட்டதாக கூறிய கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கிய  11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சேலம் ஆர்.ஆர். அன்பு உணவகத்திற்கு கடந்த திங்கள்கிழமை இரவு அப்பகுதியைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த யுவராஜ் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரியாணி தீர்ந்து போய்விட்டதாக கூறிய கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அது தற்போது வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மா.சுப்பிரமணியன் கூறுகையில், அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்து முன்னணியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். அவர்கள் திமுக உறுப்பினர்களாகத்தான் இருந்தனர். எந்த பொறுப்பிலும் இல்லை. இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் ஏற்கக் கூடியது அல்ல. ஆகையால் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக