வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அஞ்சலிமாலைமலர் :மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiDeath #DMK #MKStalin
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் நேற்று அடக்கம் செய்யப்படது. சமாதியின் அருகில் கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், சமாதிக்கு மேலே தற்காலிகமாக கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 8 மணியளவில் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்த ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அவரது சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்கள் அஞ்சலி செலுத்தும் நேரத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக்கு வந்து சமாதியில் மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக